For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

NZ vs WI: 138 ரன்னுக்கு WI ஆல் அவுட்.. நியூசிலாந்துக்கு 323 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

மவுண்ட் மவுங்கானுய்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 462 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

NZ vs WI 3rd Test New Zealand Crushes West Indies by 323 Runs Devon Conway and Tom Latham Script Historic Win

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்க வீரர் டெவன் கான்வே அபாரமாக விளையாடி இரட்டை சதம் கடந்து 227 ரன்கள் அடித்தார். கேப்டன் டாம் லதாம் 137 ரன்கள் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்சில் கவேம் ஹாட்ஜ் எடுத்த 123 ரன்கள் சதத்தின் உதவியுடன் 420 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மீண்டும் மிரட்டிய நியூசிலாந்து:

155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, மீண்டும் பெரிய அளவில் ரன் குவித்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேப்டன் டாம் லதாம் இந்த முறை 101 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த கான்வே 100 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 2-வது இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்தனர். 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து டிக்ளேர் செய்தது.

வெற்றி பெற 462 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் 67 ரன்கள் சேர்த்து சற்று ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

குறிப்பாக ஷாய் ஹோப் 3, அதானாஸ் 2 போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கவேம் ஹாட்ஜ் டக்-அவுட் ஆனார். இறுதியில் 80.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அஜஸ் படேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

Story first published: Monday, December 22, 2025, 9:13 [IST]
Other articles published on Dec 22, 2025
English summary
NZ vs WI 3rd Test: New Zealand Crushes West Indies by 323 Runs: Devon Conway and Tom Latham Script Historic Win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+