For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

NZ vs WI: வெஸ்ட் இண்டீஸ்-ஐ கதறவிட்ட நியூசிலாந்து.. மெகா ஸ்கோர்.. 575 ரன்கள் குவித்து டிக்ளேர்

மவுண்ட் மவுங்கானுய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை இரண்டு நாட்களாக ஓடவிட்டு கதறவிட்ட நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோரை எடுத்தது. டெவோன் கான்வேவின் அபார இரட்டை சதமும், ரச்சின் ரவீந்திராவின் அரைசதமும் நியூசிலாந்து அணியை வலுவான ஸ்கோரை எடுக்க உதவியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நேற்று தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்த டெவோன் கான்வே, இன்று தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து 227 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 367 பந்துகளை சந்தித்த அவர் 31 பவுண்டரிகள் விளாசினார். ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ (LBW) ஆகி அவர் வெளியேறிய போது மைதானமே எழுந்து நின்று கைதட்டியது. முன்னதாக கேப்டன் டாம் லாதம் 137 ரன்கள் எடுத்திருந்தார்.

NZ vs WI New Zealand scores 575 Runs against West Indies in first innings in 3rd Test

323 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு, நியூசிலாந்து அணியின் நடுவரிசை சற்று தடுமாறியது. நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 31 ரன்களிலும் (60 பந்துகள்), டேரில் மிட்செல் 11 ரன்களிலும், விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். கிளென் பிலிப்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரச்சின் - அஜாஸ் படேல் அதிரடி

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி 72 ரன்களுடன் (106 பந்துகள், 6 பவுண்டரி, 2 சிக்ஸர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.

கடைசி கட்டத்தில் வந்த சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், டி20 போல ஆடினார். அவர் தான் எதிர்கொண்ட 30 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி, 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். இந்த ஜோடி 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோஸ்டன் சேஸ் மற்றும் கீமர் ரோச் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ரோஸ்டன் சேஸ் மட்டும் 44 ஓவர்கள் வீசி 159 ரன்களை வாரி வழங்கினார்.

நியூசிலாந்து அணி 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணி இரண்டாம் நாள் இறுதியில் விக்கெட் இழப்பின்றி 18 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து ஆடி வந்தது. 480 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Story first published: Friday, December 19, 2025, 10:57 [IST]
Other articles published on Dec 19, 2025
English summary
NZ vs WI: New Zealand scores 575 Runs against West Indies in first innings in 3rd Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+