For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

147 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மாபெரும் சாதனை.. உலக கிரிக்கெட்டில் 3வது இடம்

புல்வாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. புல்வாயோ நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய பிராண்டன் டைலர் 44 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளையும் ஜக்காரி நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இழந்தனர்.

NZ vs ZIM

இதனை அடுத்து நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் சிஎஸ்கே வீரர்கள் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பெரிய சதம் அடித்திருந்த நிலையில் சென்று நிக்கோல்ஸ் 150 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் அந்த அணி மூன்று விக்கெட் இழ்ப்பிற்கு 601 ரன்கள் எடுத்திருந்தது. இதை அடுத்து 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக நிக் வெல்ஸ் 47 ரன்கள் எடுக்க அந்த அணி 28 புள்ளி ஒரு ஓவரில் 117 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜக்காரி இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை பட்டியலில் இது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது. முதல் இடத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் 1938 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 360 ரன்கள் வித்தியாசத்தில் 2002 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Story first published: Saturday, August 9, 2025, 19:59 [IST]
Other articles published on Aug 9, 2025
English summary
NZ vs ZIM- New zeland registered 3rd Biggest Win in Test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+