Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- ஒரே ஓவரில் 5 சிக்சர்..ஆட்டத்தையே மாற்றிய ஓடியன் ஸ்மித்.. கரேபியன் பிரீமியர் லீக்கில் அசத்தல்

மும்பை: மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரேபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தில் அதிரடி வீரர் ஓடியன் ஸ்மித் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி இருக்கிறார்.

கரேபியன் பிரீமயர் லீக் தொடரின் 25வது ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ஜமைக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தடுமாறிய கயானா

தடுமாறிய கயானா

தொடக்க ஆட்டக்காரர் ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, சந்தரபால் ஹேமராஜ் 13 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் சாய் ஹோப் அதிரடியாக விளையாடி 45 பந்துகளுக்கு 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷகிபுல் ஹசன், ஹிட்மயர், ரோமியோ செஃபர்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரே ஓவரில் 5 சிக்சர்

ஒரே ஓவரில் 5 சிக்சர்

அப்போது 17 ஓவர் முடிவில் கயானா அமேசான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்த நிலையில் தான் போட்டியே தலைக்கீழாக மாறியது. மிகல் பிரிட்டோரியஸ் வீசிய 18வது ஓவரில் ஓடியன் ஸ்மித் பந்தை மைதானத்தின் நான்கு பக்கமும் அடித்தார். அந்த ஓவரில் 2 வது ஓவரை தவிர மற்ற 5 பந்துகளும் சிக்சருக்கு பறந்தது. ஓரு வைட் பந்தையும் சேர்த்து, மொத்தம் 31 ரன்கள் அந்த ஓவரில் குவிக்கப்பட்டது.

3 ஓவரில் 74 ரன்கள்

3 ஓவரில் 74 ரன்கள்

இதனால் ஆட்டம் தலைக்கீழாக மாறியது. கடைசி 3 ஓவரில் மட்டும் 74 ரன்களை கயனா வாரியர்ஸ் அணி விளாசியது. இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கயானா வாரியர்ஸ் அணி 178 ரன்கள் விளாசியது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜமைக்கா அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.பிராண்டன் கிங் விளாசிய சதம் வீணானது.

மிரட்டல் ஆட்டம்

இந்த ஆட்டம் குறித்து பேசிய ஓடியன் ஸ்மித், எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அனைத்து பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்ற சூழலில் இருந்தோம். கொஞ்சம் டென்ஷனான சூழலாக தான் இருந்தது என்று கூறினார். ஓடியன் ஸ்மித்தை பாராட்டிய இயன் பிஷப், டி20 உலகக்கோப்பையில் இது போன்ற மிரட்டலான ஆட்டத்தை வெஸ்ட் இண்டீசிடம் எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

Story first published: Thursday, September 22, 2022, 18:30 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+