For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுல ஜெயிச்சுட்டீங்க... ஆனா அதுல தோத்துட்டீங்களே பாஸு... 'பலே' கவாஸ்கர்!

டெல்லி: இந்திய அணி ஒரு நாள் போட்டியில் தொடரை வென்றிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான முறையில் தொடரை இழந்ததை மறக்க முடியாதே என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

டைரக்டர் ரவி சாஸ்திரியின் மேற்பார்வையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக் காயத்திலிருந்து இந்திய வீரர்கள் சற்று மீண்டுள்ளனர்.

ஆனால் இதற்காக அதை மறக்க முடியாதே என்று கூறியுள்ளார் கவாஸ்கர். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது...

நம்பிக்கை வென்றது

நம்பிக்கை வென்றது

நம்பிக்கையுடன் ஆடியதால் ஒரு நாள் தொடரை இந்தியாவால் வெல்ல முடிந்துள்ளது. வீரர்களின் இந்த நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

ரொம்பச் சிறப்பு ரொம்பச் சிறப்பு

ரொம்பச் சிறப்பு ரொம்பச் சிறப்பு

வெளிநாடுகளில் ஒரு நாள் போட்டிகளில் சூழ்நிலையை கையாளுவதில் இந்திய அணி உண்மையிலேயே சிறப்பாகவே உள்ளது. செயல்படுகிறது. அது பாராட்டுக்குரியது.

இதை வச்சே கப்பைப் பிடிக்கலாம்

இதை வச்சே கப்பைப் பிடிக்கலாம்

தற்போதைய இந்திய அணியே உலகக் கோப்பையை தக்க வைப்பதற்குப் போதுமானது. இந்த வீரர்களிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. அது போதும் கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கு.

ஆனால் டெஸ்ட் தோல்வி...

ஆனால் டெஸ்ட் தோல்வி...

அதேசமயம், நாம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி சாதாரணமானதல்ல என்பது எனது கருத்து. அது மறக்க முடியாத பெரும் தோல்வியாகும்.

இவிங்கதானே அதுலயும் ஆடியது

இவிங்கதானே அதுலயும் ஆடியது

இதே வீரர்கள்தான் டெஸ்ட் தொடரிலும் ஆடித் தோல்வியைத் தழுவினர். அதை எப்படி மறக்க முடியும். அப்போது எங்கே போனது இந்த திறமையும், வேகமும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியாது.

நாளையும் டெஸ்ட் வரும்

நாளையும் டெஸ்ட் வரும்

ஒரு நாள் தொடரில் வென்றதால் டெஸ்ட் தொடர் தோல்வியை மறக்க முடியாது. காரணம், நாளையும் டெஸ்ட் தொடர் வரும். மீண்டும் வெளிநாட்டுக்குப் போய் நாம் ஆட வேண்டு்ம். எனவே இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியிலிருந்து நாம் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதை மறந்து விடக் கூடாது.

மேற்கு இந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா

மேற்கு இந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா

அடுத்து மேற்கு இந்தியத் தீவுகளுடன் நாம் 3 டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்குப் போய் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவுள்ளோம். அதை நாம் மறந்து விடக் கூடாது.

அஸாருடன் டோணியை ஒப்பிடக் கூடாது

அஸாருடன் டோணியை ஒப்பிடக் கூடாது

நான் கேப்டன்களை ஒப்பிடுவதை விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி. மேலும் அக்காலகட்டத்தில் இருந்த கேப்டன்களின் உத்திகள் வேறு, இப்போது உள்ளவர்களின் உத்திகள் வேறு. எனவே அஸாருதீனுடன் டோணியை நான் ஒப்பிட விரும்பவில்லை. இப்போதைக்கு டோணி நம்பர் ஒன், அவ்வளவுதான் என்றார் கவாஸ்கர்.

Story first published: Thursday, September 4, 2014, 13:51 [IST]
Other articles published on Sep 4, 2014
English summary
Former India captain Sunil Gavaskar praised Team India for its historic ODI series win in England on Tuesday. He however, cautioned that the previous losses in Tests to the same opponents should not be forgotten.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+