மீண்டும் அவரா.. போச்சு.. இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும்? கவலையில் முன்னாள் வீரர்கள்!
Recommended Video
டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஒரு மாத தேர்வு மற்றும் ஆலோசனையின் முடிவில் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் மற்ற நிர்வாகிகள் ஆகியோரை தேர்வு செய்ய வெளிப்படையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்பின் நடந்த தேர்வின் முடிவில் மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இரண்டு
டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், மைக் ஹேசன் ஆகியோர் கடைசி கட்ட தேர்வு வரை தேர்வானார். ஆனால் கடைசியில் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்கு இந்திய தீவுகளில் இருப்பதாக அங்கிருந்தே இன்டர்வியூவை எதிர்கொண்டார்,

எங்கு
இதனால் மேலும் இரண்டு வருடங்களுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க உள்ளார். இதற்கு இடையில் சர்வதேசம் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. அது முடிந்த பின் 2021ல்தான் இவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து மாற்றப்படுவார்.

இதற்கு எதிர்ப்பு
இதற்குத்தான் தற்போது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கூடாது. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது. இந்திய அணிக்கு வேறு ஒரு நல்ல பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்று மறைமுகமாக சாடி உள்ளனர்.

மும்பை லாபி
முக்கியமாக மும்பையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சாஸ்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் ரவி சாஸ்திரிக்கு பயிற்சி அளிக்க தகுதியே இல்லை என்று கூறினார்கள். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி இப்போது ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணிக்குள்
அதேபோல் இந்திய அணிக்குள்ளும் சாஸ்திரிக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. கோலி ஆதரவு வீரர்கள் மட்டுமே சாஸ்திரிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ரோஹித் சர்மா ஆதரவு வீரர்கள் யாரும் சாஸ்திரிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் சாஸ்திரி பயிற்சியாளராக தொடர்வதில் சிக்கல் இந்திய அணிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் .


Click it and Unblock the Notifications