For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கோலி வயதானால் எப்படி இருப்பார்கள்...? நெட்டிசன்களின் குசும்பு... வைரலாகும் புகைப்படங்கள்

Recommended Video

Cricketers Face app | நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்

மும்பை: தோனி, கோலி, ரோகித் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதானால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனையின் அடிப்படையில், அவர்களின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களை கலக்கி வருகின்றன

நாட்டில் எந்த தலையாய பிரச்சனை இருந்தாலும் கவலையில்லை, அக்கறையில்லை, ஏதாவது ஒரு கலக்கலான அல்லது காமெடியான விஷயத்தை முன் வைத்து கலாட்டாவை ஆரம்பித்து வைத்து விடுகின்றனர் நெட்டிசன்கள். சமயத்தில் அது கன்னாபின்னாவென்று டிரெண்டாகி விடுவது தான் வேடிக்கை.

அதில் லேட்டஸ்டாக கிரிக்கெட்டையும், அது சார்ந்த விஷயங்களையும் கையில் எடுத்து கலக்கி இருக்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிந்து விட்டது. மிச்சம், மீதி இருக்கின்ற விஷயங்களை ஒரு கை பார்த்து வருகின்றனர்.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

சமீபத்திய வரவு... வயதானால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல... உலகின் ஸ்டார் வீரர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களை அனைவரும் எளிதில் கண்டுபிடிக்க முடியுமா? என ஏகத்துக்கும் கலாய்த்து தள்ளியிருக்கின்றனர்.

டிரெண்டாகும் போட்டோக்கள்

டிரெண்டாகும் போட்டோக்கள்

இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படம். பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதான பின் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படம் இன்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

கோலியின் வைரல்

கோலியின் வைரல்

விராட் கோலி, கேன் வில்லியம்சன் உட்பட அனைவரின் படங்களும் வயதனால் இப்படி தான் இருக்குமென்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தல தோனி, ஜடேஜா, சாகல், ரோகித், கோலி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வயதான தோற்றம்

வயதான தோற்றம்

அவர்களின் தோனியையும், கோலியையும் மிக எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது. பழைய ஹாலிவுட் ஆர்டிட்ஸ்ட் போல, தோல் சுருங்கி அதே புன்னகையுடன் இருக்கிறார் தோனி. அதே போன்று தான் கோலியின் புகைப்படமும்.

தவான் தலை

தவான் தலை

ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரோகித் என பல பேரை எளிதாக கண்டுபிடிக்க முடிய வில்லை. ஒரு முறைக்கு பல முறை உற்று பார்த்த பிறகு... மெல்லிய மகிழ்ச்சி கலந்த புன்னகையுடன் கண்டுபிடிக்க முடிகிறது. ஷிகர் தவானை பார்த்தால் இந்தி படத்தில் ஹீரோவின் அப்பாவின் நண்பர் போல காட்சி தருகிறார்.

இது வில்லியம்சனா?

இது வில்லியம்சனா?

இந்திய வீரர்கள் மட்டும் தான் என்றில்லை... மற்ற நாடுகளின் ஸ்டார் வீரர்களையும் குசும்பு நெட்டிசன்கள் விடவில்லை. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஜென்டில்மேன் என்று அனைவராலும் புகழப்பட்ட நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் தான். நரைத்த தாடி, கொஞ்சமும் மாறாத அந்த புன்னகை( பைனலில் ஓவர் த்ரோ ரன் வந்தபோதும் அவர் இதேபோன்று காட்சியளித்ததை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது) என கலக்கியுள்ளார்.

கதாநாயகன் ஸ்டோக்ஸ்

கதாநாயகன் ஸ்டோக்ஸ்

அவருக்கு அடுத்து உலக கோப்பை கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இடது கையை உயர்த்தி ஒரு விரலை நீட்டி, ஆளப் போறான் என்பது போல புன்னகையுடன் காட்சி தருகிறார். அவரை தொடர்ந்து, டேவிட் வார்னர், பெர்குசன், முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோரின் வயதான புகைப்படங்களும் கலக்கலாக உள்ளன.

யுனிவர்சல் பாஸ்

யுனிவர்சல் பாஸ்

யுனிவர்சல் பாஸ், சிக்சர் மன்னன் கிறிஸ் கெயில் நரைத்த தாடியுடன், தி பாஸ் என்ற பெயர் பொறித்த பேட்டை கையில் வைத்தபடி காணப்படுகிறார். நீல தொப்பியுடன்(அவர் எப்போதும் அணிந்திருக்கும் அதே வட்ட தொப்பி), தாடி, மீசை எல்லாம் நரைத்து சுருட்டை தலைமுடியுடன் இருக்கிறார் இலங்கையின் மலிங்கா.

குறையாத மவுசு

குறையாத மவுசு

ரஷித் கான், கிளன் மேக்ஸ்வெல், ஜோ ரூட், பாப் டுபிளெசி, ஸ்டார்க், மார்க் ஸ்டோய்னிஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் வைரலாகி உள்ளன. உலக கோப்பை தொடர் முடிந்து அது தொடர்பான கதைகளும், சர்ச்கைகளும் ரவுண்டு கட்டி வந்தாலும்.. இந்த புகைப்படங்களுக்கான மவுசு இப்போது குறையாது போல..!

Story first published: Wednesday, July 17, 2019, 12:47 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
Old get up photos of famous cricket players goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+