ஆடுகளமா அது...? சரியான குப்பை...!! ஓல்டு டிராபோர்ட் மைதானத்தை கழுவி ஊத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்
Recommended Video
மான்செஸ்டர்: அரையிறுதி ஆட்டம் நடைபெறும் ஓல்டு டிராபோர்ட் ஆடு களம் குப்பையான ஆடுகளம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
உலக கோப்பையில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் மான்செஸ்டரில் ஓல்டு டிரா போர்டில் நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் ரிசர்வ் டே என்று அழைக்கப்படும் அடுத்த நாள் விட்ட இடத்தில் இருந்து ஆட்டம் தொடங்கியது. எஞ்சிய ஓவர்களை ஆடிய நியூசிலாந்து 8 விக். இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணி பெருத்த எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
இந்த ரன்களை எளிதாக எடுத்து, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

வீழும் விக்கெட்டுகள்
முதல் விக்கெட்டாக ரோகித் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து விராட் கோலி, பிறகு கேஎல் ராகுல். 3 பேருமே தலா ஒரு ரன் தான் எடுத்தனர். அற்புத பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை அள்ளியது நியூசிலாந்து. ரன்களை எடுக்க இந்தியா திணறுகிறது.

கடும் விமர்சனம்
இந் நிலையில் ஆட்டம் நடைபெறும் ஓல்டு டிராபோர்டு குறித்து, முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அந்த மைதானம் விளையாடுவதற்கான ஆடுகளம் அல்ல.. குப்பை களம் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மெதுவான ஆடுகளம்
ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் மோசமான நிலையில் இருப்பதை முன்னாள் வீரர்கள் பலர் காட்டமாக விமர்சித்துள்ளனர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் கூறுகையில், " ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் சிறந்தது என்று கூற முடியாது. மிகவும் மெதுவான ஆடுகளம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு லேசாக ஒத்துழைக்கிறது என்றார்.

எல்லாமே குப்பை
முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பவுட்சர் கூறியிருப்பதாவது: உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் குப்பையாக இருக்கின்றன. இரு அணிகளுக்கும் சமமாக இல்லாமல், இருவிதமாக பந்துவீசும் போது ஆடுகளம் மாறுபடுகிறது. 95 ஓவர்கள் மோசமாக இருந்து கடைசி 5 ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருப்பதற்கு பெயர் ஆடுகளமா என்று கூறியுள்ளார்.
கவுரவ குறைச்சல்
மற்றொரு இங்கிலாந்து வீரர் கிரேமி பால்பர் ட்விட்டரில் கூறி இருப்பதாவது: உலக கோப்பை அரையிறுதி நடக்கும் ஆடுகளம் இவ்வளவு மோசமானதாக இருப்பதா? பார்வையாளர்களும், ரசிகர்களும் ஏராளமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை பார்க்க வந்துள்ளனர். ஆனால், ஆடுகளத்தை இப்படி தரமற்றதாக அமைத்துள்ளது இங்கிலாந்துக்கு கவுரவ குறைச்சல் என்றார்.
ஐசிசி உத்தரவா?
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பால் நியூமேன் கூறியதாவது : ஓல்டு டிராபோர்ட் ஆடுகளம் பயங்கர பிட்சாக இருக்கிறது. இந்த உலக கோப்பையில் ஆடுகளுங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஐசிசியின் உத்தரவு படி ஏதேனும் நடந்திருக்கிறதா? உறுதியாகவா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

முற்றிலும் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஐசிசி முற்றிலும் புறந்தள்ளி இருக்கிறது. இது குறித்து ஐசிசி கூறியிருப்பதாவது: ஐசிசி நடத்தும் போட்டிகளில், ஆடுகளங்கள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் தயாரிப்போம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்றவகையில்தான் ஆடுகளங்கள் தயாரிக்கபட்டன. ஆடுகளங்கள் தயாரிப்பதில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் புலம்பல்
ஆனால், ரசிகர்களின் கருத்துகளும், எண்ணங்களும் அப்படி இல்லை. இந்த ஆடு களம் பேட்டிங்கிற்கும் சாதகமில்லை. பவுலிங்குக்கும் சாதகமில்லாமல் மந்தமாக இருந்ததால் அடித்து விளையாடவும் முடியவில்லை, பந்துகளும் ஸ்விங் ஆவதிலும் சிக்கல் இருந்தது என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications