For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்வின் மிகப்பெரிய அவமானம்.. வலி.. மனதுக்கு சரியென்றுபட்டதை முடிவெடுத்த இங்கிலாந்து வீரர்

லண்டன்: இனவெறி மற்றும் பாலியல் டிவீட்களால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓலே ராபின்சன் தனது மனதுக்கு சரியென்று பட்ட முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளும், 42 ரன்களும் எடுத்து கவனத்தை ஈர்த்தார்.

பென் ஸ்டோக்ஸுக்கு பிறகு, இங்கிலாந்தின் கவனிக்கத்தக்க ஆல் ரவுண்டராக வலம் வருவார் என்று எண்ணும் அளவுக்கு அவரது ஆட்டம் இருந்தது.

செக்ஸ் சர்ச்சை

செக்ஸ் சர்ச்சை

ஆனால், எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் இனவெறி குறித்து பாலியல் குறித்தும் பதிவிட்ட ட்வீட்டுக்கள் சமூக தளங்களில் வைரலாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இங்கிலாந்து வாரியத்தின் இந்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக, ஓலே ராபின்சன், கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த ட்வீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. அவர் தனது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருந்தார்.

இனவெறியாளன் அல்ல

இனவெறியாளன் அல்ல

பிறகு, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடனேயே அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதற்கான அவர் வீடியோவே வெளியிட்டிருந்தார். அதில், "எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.

கடுமையாக உழைத்தேன்

கடுமையாக உழைத்தேன்

அந்தக் காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். இன்று களத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எனது அறிமுக டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் எனது பெருமை பற்றியதாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த காலத்தில் எனது சிந்தனையற்ற நடத்தை இதைக் கெடுத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

சசெக்ஸ் அணிக்காக

சசெக்ஸ் அணிக்காக

இந்த நிலையில், அவர் அடுத்த சில நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி, குடும்பத்துடன் நேரம் செலவிட போவதாக அறிவித்திருக்கிறார். அதுவும், அவருக்கு வந்த உள்ளூர் கிரிக்கெட் வாய்ப்புகளை அனைத்தையும் மறுத்து அவர் இந்த முடிவினை எடுத்திருக்கிறார். இது தான் இங்கு முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய விஷயம். இங்கிலாந்தில் தற்போது T20 Blast 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அவர் சசெக்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

குடும்பத்துடன் நேரம்

குடும்பத்துடன் நேரம்

சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், சசெக்ஸ் அணி அவரை வரவேற்றது. எனினும், ஓலே ராபின்சன் இப்போதைக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சசெக்ஸ் அணி, ஓலே ராபின்சன் மீண்டும் எப்போது விளையாட தயார் என்றாலும், அவரை வரவேற்க ஒட்டுமொத்த சசெக்ஸ் அணி வீரர்களும் தயாராக உள்ளனர். இப்போதைக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி, குடும்பத்துடன் நேரம் செலவிட்டாலும், அவர் விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறோம் என்று கூறியுள்ளது.

தலைசிறந்த ஆல் ரவுண்டர்

தலைசிறந்த ஆல் ரவுண்டர்

திறமையான வீரர் என்பதாலேயே ஓலே ராபின்சனுக்கு இவ்வளவு மரியாதை. இத்தனைக்கும் அவர் சர்ச்சைக்குரிய டிவீட்ஸ் மற்றும் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீரராக அவருக்கான மரியாதையும், மதிப்பும் துளியும் குறையவில்லை. இந்த இன்னலில் இருந்து அவர் மீண்டு வந்து, இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடினால், ஒரு தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் வருவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Story first published: Friday, June 11, 2021, 16:05 [IST]
Other articles published on Jun 11, 2021
English summary
Ollie Robinson 'short break' from cricket - ஓலே ராபின்சன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+