Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசந்த நேரத்தில் பிசிசிஐக்கு ஆப்பு.. ஓமன் போட்ட ஸ்கெட்ச்.. வேகமெடுக்கும் டி20 உலகக்கோப்பை பஞ்சாயத்து

மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு ஐசிசி-க்கு புதிய யோசனை கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளதால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையையும் இந்தியாவில் நடத்தக்கூடாது என கோரிக்கைகள் வலுத்து வந்தன.

ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையையும் இந்தியாவில் நடத்தக்கூடாது என கோரிக்கைகள் வலுத்து வந்தன.

கால அவகாசம்

கால அவகாசம்

அக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை நடக்கும் என்பதால் அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வழங்குமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஜுன் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமீரகம்

அமீரகம்

ஒருவேளை பிசிசிஐ-ஆல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்த சரியான திட்டமிட்டு கொடுக்க முடியாவிட்டால் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும். அங்கு ஏற்கனவே ஐபிஎல் தொடர் செப் - அக்டோபர் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அது முடிந்தவுட கையுடன் உலகக்கோப்பை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடு

புதிய நாடு

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை நடத்த ஓமன் நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் பங்கஜ் ஹிம்ஜி, உலகக்கோப்பையை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் நாட்டில் 3வடிவ சர்வதேச போட்டிகளையும் நடத்த சிறந்த மைதானங்கள் மற்றும் அதன் வசதிகள் உள்ளது என ஐசிசி அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே உலகக்கோப்பையை இங்கு நடத்துவது குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்புகள் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

 ஜூன் 28

ஜூன் 28

ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர்த்து வேறு சில நாடுகளிலும் டி20 உலகக்கோப்பையை நடத்த வாய்ப்புகள் இருக்கிறதா என ஆராய ஐசிசி அறிவுரை கூறியுள்ளது. எப்படி இந்த மாதம் இறுதிக்குள் உலகக்கோப்பை தொடர் எந்த நாட்டில் நடக்கவுள்ளது என்பது தெரிந்துவிடும்.

Story first published: Friday, June 4, 2021, 18:10 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+