Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்பா! இது 50 ஓவர் மேட்ச்சா.. 5 ஓவர் மேட்ச்சா? 20 பந்துகளில் சட்டுபுட்டுன்னு முடிச்ச ஸ்காட்லாந்து!

அல் அமரத் : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி வெறும் 24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. லிஸ்ட் ஏ போட்டிகளில் மிகக் குறைந்த ஒருநாள் போட்டி ரன்கள் பட்டியலிலும் இந்த போட்டி முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

புரட்டிப் போட்டது

புரட்டிப் போட்டது

ஸ்காட்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் அணியாகும். சில சமயம் பெரிய அணிகளை திக்குமுக்காட வைக்கும் அந்த அணி, இந்த முறை கத்துக்குட்டி ஓமன் அணியை புரட்டிப் போட்டு வேடிக்கை பார்த்துள்ளது.

17.1 ஓவரில் 24 ரன்கள்

17.1 ஓவரில் 24 ரன்கள்

ஓமன் - ஸ்காட்லாந்து அணி மோதிய முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பந்து வீசிய ஸ்காட்லாந்து அணி 17.1 ஓவரில் ஓமன் அணியின் அனைத்து விக்கெட்களையும் 24 ரன்களில் சாய்த்தது.

ஆறு வீரர்கள் ஜீரோ

ஆறு வீரர்கள் ஜீரோ

ஓமன் அணியின் துவக்க வீரர்கள் உட்பட ஆறு விக்கெட்கள் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தது. கவார் அலி ஒருவர் மட்டுமே 15 ரன்கள் எடுத்தார். மற்ற நான்கு வீரர்கள் 1, 2 என சொற்ப ரன்களே எடுத்திருந்தனர்.

வைடுகள் இரண்டாம் இடம்

வைடுகள் இரண்டாம் இடம்

கவார் அலிக்கு அடுத்து அதிக ரன்கள் வைடுகள் மூலம் கிடைத்தது. ஸ்காட்லாந்து அணி மூன்று வைடுகள் வீசியது. ஸ்காட்லாந்து அணியில் இவான்ஸ் 2, ஸ்மித் 4, நெய்ல் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

லிஸ்ட் ஏ சாதனை

லிஸ்ட் ஏ சாதனை

லிஸ்ட் ஏ போட்டிகளில் இது நான்காவது குறைந்த ஸ்கோர் ஆகும். லிஸ்ட் ஏ வரலாற்றில் முதல் மூன்று குறைந்த ஸ்கோர் இவை தான். வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணி, 2007 - 18 ரன்கள், சார்சென்ஸ் எஸ்சி, 2012 - 19 ரன்கள், மிடில்செக்ஸ், 1974 - 23 ரன்கள்.

20 பந்துகள் மட்டுமே

20 பந்துகள் மட்டுமே

ஓமன் அணி நிர்ணயித்த 25 ரன்கள் இலக்கை அதிரடியாக 3.2 ஓவர்களில் எட்டி ஸ்காட்லாந்து அசத்தியது. பத்து விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து.

ஸ்காட்லாந்து அசத்தல்

ஸ்காட்லாந்து அசத்தல்

ஸ்காட்லாந்து அணி 2018இல் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக 371 ரன்கள் குவித்து, அந்த போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

Story first published: Tuesday, February 19, 2019, 16:11 [IST]
Other articles published on Feb 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+