அது சரி... பாட்டிக்கு பல்லு கொட்டிப் போச்சாம். கடிச்சுத் திங்க கொட்டைப் பாக்கு கேட்டுச்சாம்...!
நாட்டிங்காம்: இந்தி கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தனது ஓய்வு குறித்து பேச ஆரம்பித்துள்ளார். அதாவது ஓய்வுக்குப் பின்னர் என்ன செய்யப் போகிறேன் என்பதைச் சொல்லியுள்ளார். அதேசமயம், எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லை.
எப்பப் பார்த்தாலும் வெற்றி பெற்ற பிறகு ஸ்டம்ப்பைத் தூக்கிட்டுப் போய்டறீங்களே, அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குத்தான் ஓய்வு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் டோணி.
ஓய்வு பெற்ற பின்னர் இந்த ஸ்டம்புகளையெல்லாம் காட்சிப்படுத்த தனியாக ஒரு அறையை ஒதுக்கவுள்ளதாக கூறியுள்ளார் டோணி.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....

ஸ்டம்புகளுக்குத் தனி ரூம்
ஓய்வு பெற்ற பின்னர் நான் இதுவரை சேகரித்து வைத்துள்ள அத்தனை ஸ்டம்புகளையும் தனியாக ஒரு அறையில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு அதுதான் முதல் வேலை.

எது எதுன்னு தெரியாது
ஆனால் இந்த ஸ்டம்புகளை எந்தெந்த போட்டியின் வெற்றிக்குப் பின்னர் நான் எடுத்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதை குறித்து வைத்துக் கொள்ளவும் இல்லை.

வீடியோவில் பார்த்துப் பார்த்து
ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் உட்கார்ந்து, வீடியோவில் போட்டிகளைப் பார்த்து ஸ்டம்புகளை அடையாளம் காண முயற்சிக்கப் போகிறேன்.

நல்லா பொழுதுபோகும்
அதுதான் ஓய்வுக்குப் பின்னர் எனக்கு நல்ல பொழுது போக்காக இருக்கும் என்றார் டோணி.

தேதியைச் சொல்லலியே தல...
ஆனால் தான் எப்போது ஓய்வு பெறப் போகிறேன் என்பதை மட்டும் டோணி சொல்லவே இல்லை.
அது சரி... பாட்டிக்கு பல்லு கொட்டிப் போச்சாம். கடிச்சுத் திங்க கொட்டைப் பாக்கு கேட்டுச்சாம்... அந்தக் கதையாவுல்ல இருக்கு!


Click it and Unblock the Notifications