Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்மா இருந்தா எல்லாமே இருக்கறதாதான் அர்த்தம்... உருகும் சுரேஷ் ரெய்னா

டெல்லி : உலக அளவில் இன்று அன்னையர் தினம் வெகு சிறப்பான அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் அடைபட்டிருந்தாலும், தன்னுடைய வீட்டில் இருக்கும் தங்களுடைய அம்மாக்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல விளையாட்டு வீரர்களும் தங்களின் அம்மாக்கள் தங்களது வாழ்க்கை சிறப்பாக அமைய எவ்வாறு உதவி புரிந்தனர் என்பது குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

அம்மா என்று ஒருவர் இருந்தாலே, வாழ்க்கையில் அனைத்தும் இருப்பதாகத்தான் அர்த்தம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அம்மான்னா சும்மா இல்லை

அம்மான்னா சும்மா இல்லை

அம்மாக்களுக்கு என்று தனியாக ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் இல்லை, அவர்கள் நம்மீது எப்போது அன்பையும் பாசத்தையும் கொட்டித் தீர்ப்பார்கள். அன்னையரை கொண்டாடுவதற்கு தனியாக ஒரு தினத்தை வைக்க தேவையில்லை என்றாலும் இந்த ஒரு நாளில் அவர்களிடம் பிரத்யேக கவனம் செலுத்தலாம்.

விளையாட்டு வீரர்கள் நன்றி

விளையாட்டு வீரர்கள் நன்றி

அன்னையர் தினத்தையொட்டி, தங்களின் அம்மாக்கள் தங்களது வாழ்க்கை மேம்பட செய்த செயல்களை கவனம் கூர்ந்து விளையாட்டு வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் பங்களிப்பு எவ்வாறு தங்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவியது என்றும் இந்த அன்னையர் தினத்தில் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னா உருக்கம்

சுரேஷ் ரெய்னா உருக்கம்

நம்முடைய வாழ்க்கையில் அம்மா என்ற ஒருவர் இருந்தாலே அனைத்தும் இருப்பதாகத்தான் அர்த்தம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தன்னுடைய தாய் மற்றும் தந்தையே தன்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல ஹாக்கி வீராங்கனை நேஹா கோயல், தன்னுடைய தாய் வீட்டு வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை முன்னேற்றியது குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அன்னையர் தின கொண்டாட்டம்

அன்னையர் தின கொண்டாட்டம்

இதேபோல, டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் குணசேகரன், பாக்சிங் வீரர் விஜேந்தர் சிங், ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங், துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வளரிவன், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டவர்களும் தங்களது அன்னையர்களின் தியாகங்கள், தங்களை குறித்த கவலைகள், பெருமிதங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டனர்.

Story first published: Sunday, May 10, 2020, 13:35 [IST]
Other articles published on May 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+