Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை சேதப்படுத்தியதாக நடுவர் கண்டிப்பு.. டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய பாகிஸ்தான்!

லண்டன் : ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி கடைசி டெஸ்டில் லண்டன் ஒவல் மைதானத்தில் விளையாடியது.

அப்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி நடுவர் ஐந்து ரன்கள் பெனால்டி விதித்தார். அது மட்டுமல்லாமல் பந்தில் மாற்றினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

cricket on this Day pak vs eng inzamam ul haq

அப்போது பாகிஸ்தான் அணி கேப்டன் இன்சாம் உல் ஹக், தாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தங்கள் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி போட்டியில் விளையாட வர மாட்டோம் என்று கூறி விட்டார்கள். தேநீர் இடைவேளைக்கு சென்ற பாகிஸ்தான் அணி மீண்டும் மைதானத்திற்கு வரவில்லை.

இதனால் நடுவர்கள் பாகிஸ்தான் அணியிடம் களத்திற்கு திரும்பி வருமாறு வலியுறுத்தினர். ஆனால் பாகிஸ்தான் அணி விடாப்பிடியாக நடந்து கொண்டது. இதனை அடுத்து ஆட்டம் கைவிடப்பட்டு இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஐசிசி பாகிஸ்தான் உண்மையிலேயே பந்தை சேதப்படுத்தியதா? இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தியது. அதில் பந்து சேதப்படுத்தவில்லை என்று தீர்ப்பளித்த ஐசிசி, எனினும் போட்டியிலிருந்து பாதியில் விலகியதற்காக இன்சமாம் உல் ஹக்கிற்கு நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்தப் போட்டியை டிராவாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதனை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியில் இருந்து டிரா என்று ஐசிசி முடிவை மாற்றியது. எனினும் அடுத்த ஆண்டு மீண்டும் யூ டர்ன் எடுத்து டிராவிலிருந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக முடிவு மாற்றப்பட்டது. இது சர்வதேச கிரிக்கெட்டில் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

Story first published: Tuesday, August 20, 2024, 19:52 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+