For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதே நாள்.. கடந்த வருடம்.. மறக்க முடியுமா?? இந்திய அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!!

அடிலெயட்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க வேண்டும் என்று நினைக்க கூடிய ஒருநாள் இருந்தால், அது டிசம்பர் 19, 2020ஆம் ஆண்டுதான்.

வெற்றி பெறுபவர்கள் மட்டும் சாம்பியன்கள் கிடையாது. தோல்வி அடைந்த உடன், அவர்கள் எப்படி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பவர்களே சாம்பியன்கள்..

இந்திய கிரிக்கெட் அணியை மற்ற நாட்டு ரசிகர்கள் கேலி செய்ததும், கேலி செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திருப்பி கொடுத்ததும் இன்று தான்..

அடிலெய்ட் டெஸ்ட்

அடிலெய்ட் டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. அடிலெய்ட் எப்போதும் இந்தியாவுக்கு சாதகமான மைதானம் என்பதால், அந்தப் போட்டியை பகல் இரவு போட்டியாக நடத்தியது ஆஸ்திரேலியா

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்செய்தது. முதல் இன்னிங்சில் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது

36 ரன்களுக்கு ஆல் அவுட்

36 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 4, மாயங் அகர்வால் 9,பும்ரா 2, புஜாரா 0, கோலி 4,ரஹானே 0, விஹாரி 8,சாஹா 4, அஸ்வின் 0, உமேஷ் யாதவ் 4,முகமது ஷமி 1 என்ற ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 36 ரன்களுக்கு சுருண்டது.

Recommended Video

South Africa தொடரின் முதல் Test போட்டியில் India-க்கு காத்திருக்கும் சவால்
கிண்டல்

கிண்டல்

செல்போன் நம்பர் போல் இருந்த ஸ்கோர் கார்டை வைத்து பல அணி ரசிகர்களும் கிண்டல் செய்தார்கள்.இந்திய வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோர் இது தான். இந்த தொடரை ஆஸ்திரேலிய 4க்கு0 என்ற கணக்கில் வெல்லப்போகிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் முடிவோ வரலாற்று வெற்றி. அதனை பின்வரும் நாட்களில் பார்க்கலாம்..

Story first published: Sunday, December 19, 2021, 12:49 [IST]
Other articles published on Dec 19, 2021
English summary
On this Day EP 1 India all out for 36 runs. கடந்த ஆண்டு இதே நாள் இந்தியா 36 ரன்களுக்கு சுருண்டது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+