
டெஸ்ட் அறிமுகம்
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவதே மிகப் பெருமையான தருணம். தோனி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கி பெயர் வாங்கி சரியாக 12 மாதங்களுக்கு பிறகு தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை
தனது வாழ்நாளின் முக்கியமான தருணத்தை அவர் சென்னையில் தான் தொடங்கினார். ஆம் தனது முதல் டெஸ்ட் போட்டியை இதே நாள் 2005ஆம் ஆண்டு தான் தோனி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடினார்.

மழை
இந்தப் போட்டியில் களமிறங்கிய போது தோனிக்கு தெரிந்திருக்காது. இந்த மண் தான் தம்மை தத்தெடுக்க போகிறது என்று..!! டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியும் தோனி களத்திற்கு செல்ல 3 நாட்கள் ஆனது. சென்னையில் அப்போது கன மழை பெய்தது. இதனால் போட்டியின் முதல் 3 நாட்கள் ஒரு பந்து கூட வீசப்படவில்லை
Recommended Video

17 ஆண்டுகள்..
இதன் பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து தடுமாறிய போது களத்திற்கு அறிமுக வீரராக வந்த தோனி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், தோனிக்கு மறக்க முடியாததாக அமைந்தது. சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தோனி, தமக்கும், சென்னைக்கும் இடையிலான பந்தம் ஐ.பி.எல். முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், சென்னையில் தான் முதல் டெஸ்டில் விளையாடினேன் என்றும் கூறியிருந்தார். அந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.


Click it and Unblock the Notifications