டி20 உலக கோப்பை அணியில் சர்ப்ரைஸ் - ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்த விராட் கோலி

டி20 உலக கோப்பைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... சஸ்பென்ஸ் வைத்த கோலி

இந்தூர் : இந்த ஆண்டின் இறுதியில் ஆடப்படவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் ஒரு சர்ப்ரைஸ் இணைப்பு காத்திருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பௌலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை பாராட்டி பேசிய விராட் கோலி, டி20 உலக கோப்பையில் ஒரு பௌலர் சர்ப்ரைஸ் இணைப்பாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

2வது போட்டியில் இந்தியா அபார வெற்றி

2வது போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இந்தூரில் நேற்று நடைபெற்ற சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

பௌலர், பேட்ஸ்மேன்களுக்கு பாராட்டு

பௌலர், பேட்ஸ்மேன்களுக்கு பாராட்டு

வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, இந்த அபார வெற்றிக்கு காரணமான பௌலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விராட் கோலி பெருமிதம்

விராட் கோலி பெருமிதம்

கடந்த தொடர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி தொடர்ந்து வலிமையடைந்து வருவதாக விராட் கோலி பெருமை தெரிவித்தார். இந்த தொடரில் ரோகித் சர்மா இல்லாதபோதிலும் போட்டியில் வெற்றி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய விராட் கோலி, இது மிகச்சிறப்பானது என்றும் குறிப்பிட்டார்.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

அணியில் இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, டி20 வடிவத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளதாகவும் அவரது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

சர்ப்ரைஸ் இணைப்பு

சர்ப்ரைஸ் இணைப்பு

இந்த ஆண்டின் இறுதியில் ஆடப்படவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் சர்ப்ரைஸ் இணைப்பாக பௌலர் ஒருவர் சேர்க்கப்பட உள்ளதாக பெயரை குறிப்பிடாமல் கோலி கூறினார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பு

உள்ளூர் போட்டிகளில் சிறப்பு

உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் விராட் கோலி குறிப்பிட்டார். இதனால் இவர்தான் அந்த சர்ப்ரைஸ் இணைப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"சிறப்பான பௌலர்கள் உள்ளனர்"

டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு, அதற்காக தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக முன்னதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டியை எதிர்கொள்ள போதுமான மற்றும் சிறந்த பௌலர்கள் இந்திய அணியில் உள்ளதாக தற்போது அவர் கூறியுள்ளார்.

"அணியில் இணைந்தது மகிழ்ச்சி"

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஜஸ்பிரீத் பும்ரா இந்த போட்டியில் மீண்டும் பந்துவீசியது குறித்து விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

திறமையான மூத்த வீரர்கள்

திறமையான மூத்த வீரர்கள்

அணியில் ஒரே திறமையை கொண்ட வீரர்களில் மூத்த வீரர்களை டி20 உலக கோப்பைக்காக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

10ம் தேதி பூனாவில் நடைபெறுகிறது

10ம் தேதி பூனாவில் நடைபெறுகிறது

இந்தியா -இலங்கை இடையிலான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்தூரில் நேற்றுநடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli said that Indian Team have enough bowling options for T20 World cup
Story first published: Wednesday, January 8, 2020, 10:52 [IST]
Other articles published on Jan 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X