தம்பி.. தெரிஞ்சுக்கோ... தனி ஒருவனால் கோப்பையை ஜெயிக்க முடியாது... கம்பீர் வாயை அடைத்த பிளெமிங்
Recommended Video

சென்னை:தனி ஒரு வீரரால் மட்டுமே ஐபிஎல் தொடரை வெல்ல முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியதாவது:

கோப்பையை வெல்லவில்லை
விராட் கோலி 8 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. எனினும் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படாமல் உள்ளார். எனவே அவர், அணிக்கு கடமைப்பட்டு உள்ளார் என்றார்.

கேள்விக்கு பதில்
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டியளித்தார். அப்போது கம்பீர் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

தொடர் மிக கடினம்
தனி ஒருவரால் ஐபிஎல் தொடரை வென்றுவிட முடியாது. ஒரு தொடரில் வெற்றி என்பது மிக கடினம். எல்லா அணிகளுமே சிறப்பாக செயல்படும் என்பதால் தொடர் கடினமாக இருக்கிறது.

சவால்கள் உள்ளன
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக, வீரராக இருந்தால் அவர், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியும் என்பதல்ல. கோலிக்கு சவால்களை எதிர் கொள்கிறார்.

சிறப்பான செயல்பாடு
காயம் காரணமாக லுங்கி நிகிடி விலகியுள்ளது இழப்புதான். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பேட்ஸ்மேன்களை ஆட்டத்தை உணர்ந்து, அவர்கள் பவுலிங் செய்கின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications