Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு சின்ன மிஸ்டேக்கூட தொடரையே கெடுத்துடும்... ஆர்சிபி வீரர்களுக்கு விராட் எச்சரிக்கை

துபாய் : ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாய் சென்று சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து ஆர்சிபி வீரர்கள், அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக வீடியோ கால் மூலம் உரையாடினார்.

ஒரு சிறிய தவறுகூட மொத்த ஐபிஎல் தொடரையும் கெடுத்துவிடும் என்பதால் பயோ பபள் முறையை ஆர்சிபி வீரர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் முக்கியமாக மூத்த வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய விராட் வலியுறுத்தியுள்ளார்.

தொடர் பரிசோதனைகள்

தொடர் பரிசோதனைகள்

ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்கும்வகையில் ஆர்சிபி அணியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாய் சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள அவர்களுக்கு, 1, 3 மற்றும் 6வது நாட்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த 3 டெஸ்ட்களிலும் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

விராட் தலைமையில் கூட்டம்

விராட் தலைமையில் கூட்டம்

ஐபிஎல்லின் 8 அணிகளுக்கும் இதே நடைமுறையே கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில், துபாய் சென்றடைந்துள்ள ஆர்சிபி அணியின் முதல் கூட்டம் வீடியோ கால் மூலம் நடத்தப்பட்டது. இதில் அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாட்டிற்கான இயக்குநர், மைக் ஹெசன், தலைமை பயிற்சியாளர் சைமன் காட்டிச் மற்றும் அணியின் வீரர்கள் கலந்து கொண்டனர்.

விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

ஐபிஎல் போட்டிகள் பயோ பபள் முறையில் நடத்தப்படவுள்ள நிலையில், ஒரு சிறிய தவறை செய்தாலும், மொத்தமாக தொடரே கெட்டுவிடும் என்று கூட்டத்தில் பேசிய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதை முதல் நாளிலிருந்தே கடைபிடிக்க வேண்டும் என்றும் பயிற்சிகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மைக் ஹெசன் திட்டவட்டம்

மைக் ஹெசன் திட்டவட்டம்

முக்கியமாக அணியின் மூத்த வீரர்கள் கண்டிப்பாக பிசிசியின் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, விதிமுறை மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் விதிமீறும் வீரர்கள் உடனடியாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அணியின் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, August 25, 2020, 18:51 [IST]
Other articles published on Aug 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+