Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி டெஸ்ட்.. அபார சதத்தோடு, பல சாதனைகளை பார்சல் செய்த கோஹ்லி!

டெல்லி: இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டியில் தனது 20வது சதத்தை பதிவு செய்துள்ளார். முரளி விஜயும் அசத்தல் சதம் விளாசினார்.

டாசில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானும், நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றபோதிலும், முரளி விஜயும், கோஹ்லியும் அணியை மீட்டெடுத்தனர்.

இருவரும் ஆளுக்கு ஒரு சதம் பார்சல் செய்து அசத்தினர். இலங்கை பவுலர்களுக்கு மீண்டும் நாக்பூர் டெஸ்டை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது கோஹ்லி ஆட்டம்.

அதிவேக 5000 ரன்கள்

அதிவேக 5000 ரன்கள்

கோஹ்லி இன்று விளாசியது டெஸ்ட் அரங்கில் 20வது சதமாகும். விஜய் 11வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். கோஹ்லி மற்றொரு சாதனையையும் செய்துள்ளார். விரைவாக டெஸ்ட் போட்டியில் 5000 ரன்களை கடந்து அவர் சாதித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த வீரர்களில் அதிவேக 5000 ரன்களை கடந்தவர் பட்டியலில் கோஹ்லிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இந்திய ஜாம்பவான்கள்

இந்திய ஜாம்பவான்கள்

சுனில் கவாஸ்கர் 95 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிரடி வீரர் சேவாக் 98 போட்டிகளிலும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 103 போட்டிகளிலும் 5000 ரன்களை எட்டி அசத்தினர். விராட் கோஹ்லி 105வது போட்டியில் 5000 ரன்களை கடந்துள்ளார்.

தொட்டதெல்லாம் செஞ்சுரிதான்

தொட்டதெல்லாம் செஞ்சுரிதான்

விராட் கோஹ்லி மற்றொரு சாதனையை சத்தமின்றி செய்துள்ளார். அதாவது, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து டெஸ்டுகளிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற மகுடத்தை விராட் கோஹ்லி சூடிக்கொண்டுள்ளார்.

சாதனை மழை

சாதனை மழை

கேப்டனான பிறகு டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை விளாசிய சாதனையையும் இன்று கோஹ்லி படைத்தார். முன்னதாக டோணி (3454 ரன்கள்), கவாஸ்கர் (3449 ரன்கள்) விளாசியிருந்தனர். விரைவிலேயே இந்த பட்டியலில் கோஹ்லி முதலிடத்திற்கு வருவதோடு, இன்னும் பல ஆயிரம் ரன்களை அவர் கேப்டன் என்ற இடத்தில் இருந்தபடியே குவிக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Story first published: Saturday, December 2, 2017, 16:24 [IST]
Other articles published on Dec 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+