மேட்ச் துவங்கும் முன்பே 2 பேர் அவுட்.. தவிக்கும் இலங்கை அணி
பெங்களூரு : ஆசிய கோப்பை போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறும் முதலாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியை ஏதிர் கொள்கிறது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னணி வீரர் தனுஷ்கா குணதிலகா முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவர் 6 மாதம் தடையில் இருந்து தற்போதுதான் அணிக்கு மீண்டும் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக ஸ்நேஹன் ஜெயசூரியா அணியில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்கள் காயத்தால் வெளியேறுவது இது முதல் முறை அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சந்திமால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது குணதிலகா இரண்டாவது வீரர் ஆவார் .
மேலும் சுழல் பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா லீக் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகமே. அவர் தனது மனைவியின் பிரசவத்திற்காக இலங்கையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி ஒரு நாள் போட்டிகளில் மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அந்த அணி பங்கேற்ற 39 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி வீரர்கள் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
Story first published: Friday, September 14, 2018, 22:48 [IST]
Other articles published on Sep 14, 2018


Click it and Unblock the Notifications