Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: விடாது பெய்யும் மழையால் 2வது நாள் ஆட்டம் ரத்து!

பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் இருவரின் சிறப்பான ஆட்டத்தால், முதல் நாளில் நல்ல தொடக்கம் கண்டிருந்த நிலையில் மழை காரணமாக, 2வது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று தொடங்கியது.

தடுத்தும், அடித்தும்

தடுத்தும், அடித்தும்

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

மழை காரணமாக 4 மணி நேரங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று மொத்தம் 56 ஓவர்கள்தான் வீசப்பட்டன. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 239 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றயை ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷிகர் தவான் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.

தொடர் மழை

தொடர் மழை

இன்று காலை மீண்டும் பதுல்லாவில் மழை பெய்ததால், 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபட்டது. மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை விடாமல் பெய்ததால், 2வது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாக, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் அம்பயர்கள் அறிவித்தனர். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறும். இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு மழை இருக்கலாம் என்று அந்த நாட்டு வானிலை இலாகா தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா.

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.

Story first published: Thursday, June 11, 2015, 14:00 [IST]
Other articles published on Jun 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+