நிருபரின் அந்த ஒரு கேள்வியால் கோபமடைந்த கோஹ்லி!
மும்பை: செய்தியாளர் சந்திப்பின்போது, நிருபர் கேட்ட ஒரு கேள்வியால் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கடும் கோபமடைந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக மும்பையில் அணி கேப்டன் கோஹ்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கோஹ்லி வழக்கமாகவே ஆங்ரி பேர்ட்தான். ஆனால் நிருபர்கள் கேள்விக்கு பொறுமையாகத்தான் பதில் சொல்லியபடி இருந்தார். ஒரு கேள்விதான் அவரை சீண்டிவிட்டது.

கோஹ்லிக்கு கேள்வி
நிருபரின் அந்த கேள்வி, இதுதான்: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? என்பதே நிருபரின் கேள்வி. ஐபிஎல் தொடரில் கோஹ்லி சிறப்பாக ஆடாத நிலையில் இவ்வாறு நிருபர் கேள்வி எழுப்பினார்.

கோஹ்லி கோபம்
இதற்கு கோகபத்தோடு எதிர்கேள்வி கேட்டார் கோஹ்லி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றார் அவர். உங்களது கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறோம் என நிருபர் பதில் அளித்தார்.

நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள்
நான் என்ன நினைக்கிறேன் என்பது இதில் விஷயமே இல்லை. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள். இவ்வாறு கோஹ்லி கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றார் கோஹ்லி.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் ஜூன் 4ம் தேதி எட்ஜ்பஸ்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications