Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு ரன் தான் பாக்கி...! புதிய உலக சாதனைக்கு காத்திருக்கும் கேன் வில்லியம்சன்..!

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

லண்டன்: உலக கோப்பையில், இன்னும் ஒரு ரன் அடித்தாலே, புதிய உலக சாதனை படைத்துவிடுவார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். இன்றைய உலக கோப்பை பைனலில் அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் பைனலுடன் முடிகிறது. அதில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும், முதல் முறையாக கோப்பை வென்று சாதனை படைக்கும்.

எனவே, இரு அணிகளும் கோப்பையை கைப்பற்ற புதிய வியூகங்களை வகுத்துள்ளன. ஒவ்வொரு அணி வீரரின் பிளஸ், மைனசுகளை பட்டியலிட்டு, அதற்கேற்ப இரு அணிகளும் திட்டத்தை வகுத்திருக்கின்றன.

கேப்டனை நம்பி அணி

கேப்டனை நம்பி அணி

இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில், வலுவான இங்கிலாந்தை காட்டிலும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனை சார்ந்து தான் இருக்கிறது. அந்த அணி எடுத்த ரன்களில் பெரும்பாலானவை, அவர் அடித்தது தான் என்பதே அதற்கு சாட்சி.

ஜெயவர்தேனவுடன் சமன்

ஜெயவர்தேனவுடன் சமன்

நடப்பு உலக கோப்பையில் அவர் இதுவரை 9 போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் 2 சதம், 2 அரைசதம் என மொத்தமாக 2 இன்னிங்சில், 548 ரன்கள் குவித்துள்ளார். அதன் மூலம் ஒரே உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை, இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெய வர்தனே உடன் பகிர்ந்துள்ளார். ஜெயவர்தனே, 2007ம் ஆண்டு உலக கோப்பையில் 548 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார்.

1 ரன் தான் பாக்கி

1 ரன் தான் பாக்கி

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய உலக கோப்பை பைனலில் வில்லியம்சன் 1 ரன் எடுத்தால் போதும். அவர் ஜெயவர்தனேவின் உலக சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை படைப்பார். இந்த சாதனையை தவிர மேலும் சாதனைகள் அவருக்கு காத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் வில்லியம்சன் சதம் அடித்தால் ஒரே உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிக சதம் விளாசிய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை (3 சதம்) சமன் செய்வார்.

அதிக ரன் அடித்தவர்கள்

அதிக ரன் அடித்தவர்கள்

மேலும், உலக கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பெறலாம். முன்னதாக, இந்தியாவின் ரோகித் சர்மா (648 ரன்கள்), ஆஸி.யின் வார்னர் (647 ரன்கள்), வங்க தேசத்தின் ஷாகிப் அல் ஹாசன் (606 ரன்கள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

முதலிடம் பிடிப்பாரா?

முதலிடம் பிடிப்பாரா?

அவர்களுக்கு அடுத்த படியாக, இங்கிலாந்தின் ஜோ ரூட் (549 ரன்கள்), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (548 ரன்கள்) உள்ளனர். இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சதமடித்தால் ரோகித் சர்மாவை முந்திவிட்டு, முதலிடம் பிடிக்கலாம்.

Story first published: Sunday, July 14, 2019, 10:28 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+