"ரெய்னா ஆட்டத்தைவிட காதலி சுருதிதான் அழகு" தீர்ப்பு சொல்லிட்டாருய்யா நாட்டாமை ஜடேஜா
மும்பை: ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தைவிட அவரது காதலிதான் அழகு என்று சக வீரர் ரவீந்திரஜடேஜா தெரிவித்து கடுப்பேற்றியுள்ளார்.
வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் ஐபிஎல்-7ல் நேற்று பஞ்சாப்பை எதிர்கொண்டது சென்னை அணி. பஞ்சாப் அணி சேவாக்கின் புண்ணியத்தால் 226 ரன்களை குவித்தது.
பெரிய ஸ்கோர்தான் என்றாலும் சென்னையும் அடித்து நொறுக்கியது. ஆறே ஓவர்களில் 100 ரன்களை கடந்து சாதித்தது சென்னை. 25 பந்துகளில் ரெய்னா 87 ரன் அடித்து அதிரடி சாதனை செய்தார். மேலும் அனைத்து ஐபிஎல் சீசனிலும் சராசரியாக 400 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையையும் ரெய்னா பெற்றார். இருப்பினும் பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், சென்னை போராடி தோல்வியடைந்தது. ரெய்னாவின் ஆட்டம் எதிரணி வீரர்களாலும் சிலாகித்து பாராட்டப்பட்டது.
இதனிடையே சென்னை அணியின் சகவீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திரஜடேஜா ரெய்னாவின் ஆட்டத்தைவிட அவரது காதலி சுருதி ஹாசன்தான் அழகு என்று டுவிட் செய்துள்ளார். "ரெய்னாவின் இன்றைய ஆட்டத்தைவிட அழகானது ஒன்று உண்டு என்றால் அது அவரது காதலி சுருதி ஹுசைன்தான்" என்று கூறியுள்ளார். சுருதி ஹாசன் படத்தையும், ரெய்னா படத்தையும் சேர்த்தே டுவிட்டும் செய்துள்ளார். ஆனால் அவசரத்தில் சுருதி ஹாசன் என்பதற்கு பதிலாக ஹுசைன் என்று பெயரை மாற்றியிருந்தார்.


Click it and Unblock the Notifications