Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: கொல்கத்தாவை கொல்கத்தாவில் வைத்து கொத்துக்கறி போடுவது கஷ்டம்தான்.. 'மும்பை'.பான்டிங்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி, சிறப்பான நிலையில் உள்ளதாக அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்தார்.

ஐபிஎல் 8வது சீசனில், கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது, மும்பை இந்தியன்ஸ்.

2013ம் ஆண்டில் கொல்கத்தா மைதானத்தில்தான், ஐபிஎல் கோப்பையை வென்றோம். அந்த பசுமையான நினைவுகளோடு விளையாட செல்கிறோம். கொல்கத்தா பிட்சின் தன்மை குறித்து எங்களுக்கு தெரியும்.

சிறப்பான அணி

சிறப்பான அணி

எங்கள் அணியில், இந்தியாவின் இளம் திறமையான வீரர்களும், வெளிநாட்டின் ஸ்டார் வீரர்களும் நிறைந்து, சிறப்பான அணியாக காணப்படுகிறது.

முதல் போட்டி எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தயார்

தயார்

உலக கோப்பை தொடருக்கு முன்பே, ஐபிஎல் கால அட்டவணை பற்றி எங்களுக்கு தெரியும் என்பதால், மனதளவில் ஐபிஎல் தொடரில் ஆட தயாராகவே உள்ளோம். எந்தவித சோர்வும் கிடையாது.

ரிக்கி வருகை

ரிக்கி வருகை

ஆஸ்திரேலியாவுக்கு இருமுறை உலக கோப்பைகளை பெற்றுத் தந்த ரிக்கி பாண்டிங், எங்குக்கு பயிற்சியாளராக கிடைத்துள்ளது, மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. 2013 ஐபிஎல் தொடரில், ரிக்கி பாண்டிங் முதல் ஆறு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன்பிறகு, அணியின் பேலன்ஸ் கருதி, தன்னை ஆட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார். அணியை பற்றி சிந்திக்கும் இதுபோன்ற வீரர்கள் மிகவும் சொற்பமே.

வித்தைக்காரர் பாண்டிங்

வித்தைக்காரர் பாண்டிங்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, பாண்டிங், ஆலோசகராக நியமிக்கப்பட்டபோதுதான், நாங்கள் கோப்பையை வென்றோம். பாண்டிங்கிற்கு, எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வித்தை தெரியும். இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.

சவால்

சவால்

பேட்டியின்போது உடனிருந்த பாண்டிங் கூறுகையில், நடப்பு சாம்பியனை, அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது சவாலான விஷயம். அந்த வகையில் கொல்கத்தாவுடனான முதல் போட்டி மும்பைக்கு சவாலானது.

நல்ல பயிற்சி

நல்ல பயிற்சி

மும்பை வீரர்கள் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பயிற்சி, எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.

Story first published: Monday, April 6, 2015, 11:01 [IST]
Other articles published on Apr 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+