'டைம்' வரும்போது பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்புவோம்.. டோணி
மிர்பூர்: இந்தியாவின் பேட்டிங் இன்னும் முழுமையாக விஸ்வரூபம் எடுக்கவில்லை. வரும் போட்டிகளில் அவர்களது திறமை பளிச்சிடும் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா பிரமாமாக வென்று விட்டது. ஆனால் இந்தியாவின் பேட்டிங்கின் திறமை, அதாவது சில முக்கிய வீரர்கள் இன்னும் சரிவர ஆடாமல் உள்ளனர்.
பந்து வீச்சால் இந்தியா ஜெயித்துள்ள போதிலும், பேட்டிங் திறமையும் அவசியமாச்சே என்று குரல்கள் கிளம்பியுள்ளன.
இதற்கு டோணி பதிலளித்துள்ளார். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான போட்டிக்குப் பின்னர் டோணி செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது...

நன்றாகத்தான் ஆடுகிறோம்
நாம் நன்றாகவே ஆடுகிறோம். எனவே சில வீரர்கள் ஜொலிக்காமல் போனதை பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.

பட்டையைக் கிளப்பும் பந்து வீச்சு
நமது பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. எனவே அவர்கள் ஜொலிக்கிறார்கள். அதேபோல பேட்டிங்கும் கூட அதே போன்ற சாதனையைப் படைக்கும் என்று நம்புகிறேன்.

டெத் பவுலர் சரியில்லையே பாஸ்
அப்படியெல்லாம் சொல்ல முடியாது. கடைசி நேரத்தில் பந்து வீச எல்லா அணியிலும் யராவது ஒருவரை வைத்திருப்பார்கள். நாம் அப்படியெல்லாம் யாரையும் நம்பி இருப்பதில்லை. அனைத்துப் பவுலர்களுமே கடைசி வரை சிறப்பாக பந்து வீசுபவர்கள்தான்.

சமயத்திற்கேற்ப போட்டுக்க வேண்டியதுதான்
நேரத்திற்கேற் அதற்குரிய பவுலரை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

ரோஹித் சூப்பரப்பு
ரோஹித் சர்மா சிறப்பாக ஆடியுள்ளது அவருக்கு நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.தொடர்ந்து சிறப்பாக ஆட அவருக்கு உத்வேகமாக இருக்கும் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications