For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”முதல் குழந்தை” வரவேற்க தயாராகும் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி தம்பதி.. குவியும் வாழ்த்து!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் மற்றும் நடிகை ஆதியா ஷெட்டி இருவரும் அடுத்த ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேபோல் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு பயணித்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.

ind vs sl kl rahul athiya shetty

பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருந்து வரும் கேஎல் ராகுல், வெளிநாடுகளில் எப்போதும் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று எந்த நாடாக இருந்தாலும் எளிதாக தகவமைத்து கொண்டு பேட்டிங் செய்பவர். இதனால் கேஎல் ராகுலுக்கு மீண்டும் இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் மற்றும் பிரபல மாடலான ஆதிஷா ஷெட்டி இருவரும் 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவரும் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் லிவிங் டூகெதரில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

இதன்பின் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி இருவரும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். இந்த நிலையில் இன்று கேஎல் ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டி இருவரும் இணைந்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு அழகான ஆசீர்வாதம் அடுத்த ஆண்டு நமக்கு கிடைக்கப் போகிறது என்று பதிவிட்டுள்ளனர். இதன் மூலமாக ஆதிஷா ஷெட்டி கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

ind vs sl kl rahul athiya shetty

ஏற்கனவே ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது கேஎல் ராகுல் - ஆதிஷா ஷெட்டி தம்பதிக்கும் குழந்தை பிறக்கவுள்ளதால், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மகிழ்ச்சியான செய்தி காரணமாக கேஎல் ராகுல் நிச்சயம் பேட்டிங் ஃபார்முக்கு வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 8, 2024, 19:34 [IST]
Other articles published on Nov 8, 2024
English summary
"Our Beautiful blessing is coming on 2025" KL Rahul and Athiya Shetty announced Pregnancy together in instagram - ”முதல் குழந்தை” வரவேற்க தயாராகும் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி தம்பதி.. குவியும் வாழ்த்து!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+