யாரு, என்னன்னு பார்க்க மாட்டோம்.. முதல்ல அவரு விக்.. அப்புறம் எல்லாருக்கும் அது தான் நடக்கும்..!
Recommended Video
மான்செஸ்டர்: ஹிட் மேன் ரோகித்தை வீழ்த்த வியூகம் வைத்திருப்பதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் கலந்து கொண்ட தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
போட்டி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட் செய்யும் அணி நல்ல ரன்களை குவிக்கும். நடப்பு உலக கோப்பையில் தொடரில் இந்த மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற்றது.

பேட்டிங் அணியே வெற்றி
5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

வெற்றி பெற முற்படும்
இந்நிலையில் போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறி இருப்பதாவது: இந்திய அணி ஒரு வெற்றிகரமான அணி. எப்படி இருந்தாலும், ஒரு அணி, மற்ற அணியை ஜெயிக்கவே முற்படும். அதற்கான போராட்டங்களில் இறங்கும்.

கவனமாக இருக்கிறோம்
அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கு தான் வெற்றி. அரையிறுதியில் வந்துள்ள 4 அணிகளுமே சிறப்பான அணிகள். திறமையான அணிகள். சில போட்டிகளில் தோற்றிருந்தாலும், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.

விக். வீழ்த்த திட்டம்
குறிப்பாக, அந்த அணியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எங்களுக்கு அது பற்றி கவலை இல்லை இது ஒரு போட்டி.. அவ்வளவே. யார், யார் எல்லாம் விளையாடுகிறார்கள் என்பதை பார்க்காமல் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே திட்டம். அதனால் ரோகித் சர்மாவின் சாதனைகளை மறந்து, அவரை விரைவில் வேகப் பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி விடுவார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications