For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையா..? அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க

Recommended Video

WORLD CUP 2019 | உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ

லண்டன்: உலக கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம் என்று ஜோ ரூட் கூறியுள்ளார்.

அண்மையில் முடிந்த உலக கோப்பை தொடரில் உள்ளூர் அணியான இங்கிலாந்து ஒரு கட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறுமா என்று இருந்தது. ஆனால் கடைசி 2 லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்கு 3வது அணியாக நுழைந்தது.

அதன் பிறகு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. பைனலில் நியூசிலாந்தை சந்தித்தது. 2 அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் டையில் முடிந்தது. பின்னர், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது.

இங்கிலாந்து சாம்பியன்

இங்கிலாந்து சாம்பியன்

அதுவும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் வெற்றி என்ற அடிப்படையில் இங்கிலாந்து புதிய உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருந்தாலும், 44 ஆண்டு உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு இதுவே முதல் கோப்பை.

உற்சாக கொண்டாட்டம்

உற்சாக கொண்டாட்டம்

அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்தனர். கொண்டாட்டம் முடிவடைவதற்குள், டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் தனது அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கினார்.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பரம எதிரிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றால் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும்.

உயரிய இலக்கு

உயரிய இலக்கு

அதனால் உலக கோப்பையை விட ஆஷஸ் போட்டியை வெல்வதே எங்களுக்கு மிக உயரிய இலக்கு என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ஆஷஸ் கோப்பை வேண்டும்

ஆஷஸ் கோப்பை வேண்டும்

2019ம் ஆண்டு எங்களுக்கான ஆண்டு. உலக கோப்பையை தட்டிச் சென்றது போல் ஆஷஸ் கோப்பையையும் வெல்வோம். அதற்காக ஒவ்வொரு வீரர்களும் களத்தில் இறங்க உள்ளனர். உலக கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடர்களில் எதிர்கொள்வோம் என்றார்.

Story first published: Wednesday, July 17, 2019, 14:46 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
Our next target is to clinch Ashes series says Joe root.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+