Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை-பிசிசிஐ திட்டவட்டம்

கொல்கத்தா: இலங்கையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் டுவென்டி 20 போட்டித் தொடரில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற வாரிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது பழைய முடிவு. இதில் மாற்றண் ஏதும் இல்லை. இன்று இதை அனுமதித்தால், நாளை மேற்கு இந்தியத் தீவுகளிலோ அல்லது ஜிம்பாப்வேயிலோ யாராவது ஒரு தனி நபர் போட்டித் தொடரை நடத்தலாம். அதற்கும் நமது வீரர்களை அனுப்பக் கோருவார்கள். எனவே இலங்கை தொடரில் இந்திய வீர்ரகளை பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற முடிவு இறுதியானது, உறுதியானது.

இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை நடத்தும் ஒப்பந்தம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை. எனவே இது அதிகாரப்பூர்வ போட்டி அல்ல, ஒரு தனியார் நிறுவனத்தின் போட்டித் தொடர்.

ஆனால் ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் வேறு. அவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்திய கிரிக்கெட் வாரியமே அதை நடத்துகிறது. இது தனியார் நிகழ்ச்சி அல்ல என்றார் மனோகர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+