எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்
Recommended Video
லண்டன்: எங்களால் இந்திய அணியையும் வெல்ல முடியும், அதற்கான தகுதிகள் இருக்கின்றன என்று வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் சவால் விடுத்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்திய வங்கதேசம், 7 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. சவுதாம்ப்டனில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்களில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.
வலிமை வாய்ந்த தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சி அளித்தனர். மேற்கிந்திய தீவுகள் 300 ரன்களுக்கு மேல் சேர்த்ததையும் சேசிங் செய்து வங்கதேசம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

முக்கிய ஆட்டங்கள்
இந்நிலையில், வங்கதேசத்துக்கு அடுத்து வருகிற 2 ஆட்டங்களும் ரொம்ப முக்கியமானவை. இந்தியாவை ஜூலை 2ம் தேதி சந்திக்கிறது. அதன் பிறகு, பாகிஸ்தானுடன் ஜூலை 5ம் தேதி மோதுகிறது. இந்த இரு போட்டிகளையும் வென்றால் மட்டும் அரையிறுதி குறித்த வாய்ப்புகள் நிச்சயம் உறுதியாகும்.

ஆட்ட நாயகன் விருது
உலக கோப்பை தொடரில் ரன் சேர்ப்பில் முன்னணியில் இருக்கும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நேற்றைய ஆட்டத்தில் அரை சதமும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின், ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:

எளிதான காரியம் அல்ல
இந்திய அணி மிக வலிமையானது. அது எங்களுக்கு தெரியும். இதுவரை தோல்வி அடையாமல் புள்ளிகள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், உலக கோப்பையை வெல்ல சிலருக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்டாலும், அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

திறமை இருக்கிறது
கடந்த கால அனுபவங்கள் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் நிச்சயம் உதவும். எங்களால் இந்தியாவை எளிதாக வெல்ல முடியாது என்பது தெரியும். ஆனால், இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு வெல்லும் அளவுக்கு திறமை இருக்கிறது, வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சிறந்த வீரர்கள் இருந்தாலும், முடிந்த அளவு சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

கோச் சுனில் ஜோஷி
வங்கதேச அணிக்கு சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி உள்ளார். 1996 முதல் 2001ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியவர். இந்த தருணத்தில் அவரின் பேச்சையும் முக்கியமாக பார்க்க வேண்டி உள்ளது.

சிறப்பான பவுலிங்
அவர் கூறியிருப்பதாவது: எங்களின் சுழற்பந்துவீச்சு சிறந்தது என்பது, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக வீசிய போது அனைவரும் தெரிந்திருப்பார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறோம்.

பார்மில் உள்ள வீரர்
அயர்லாந்தை ஜெயித்திருக்கிறோம். இந்தியாவை இதற்கு முன் 3 முறை தோற்கடித்துள்ளோம். லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், மோர்டாசா ஆகிய வீரர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். இந்தியாவை சுழற்பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் திணறடித்தது போல, நாங்களும் செயல்படுத்துவோம். எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications