Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துவக்க ஆட்டக்காரர்கள் நீடிச்சு நிக்கணும்... அப்பதான் நின்னு அடிக்க முடியும்... ஸ்மித் கலக்கம்

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி இடையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 15வது போட்டியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த இரு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்கத்தில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு ஏமாற்றம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அணியின் முதல் 3 இடங்களில் இறங்கி விளையாடும் வீரர்கள் நீடித்து நின்று விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி வெற்றி

ஆர்சிபி வெற்றி

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல்லின் 15வது போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.

ஒற்றை இலக்கத்தில் அவுட்

ஒற்றை இலக்கத்தில் அவுட்

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான வெற்றித் துவக்கத்தை தந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்கத்தில் களமிறங்கி விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கடந்த இரு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வருவதால் அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்

ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்

இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் போதிய ரன்கள் எடுக்காததே தோல்விக்கு காரணம் என்று அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். பார்ட்னர்ஷிப்பும் சரியாக அமையவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியிலும் லோம்ரார் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சாத்தியப்படாத வெற்றி

சாத்தியப்படாத வெற்றி

அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் வெற்றி சாத்தியப்படாததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் களமிறங்கும் 3 வீரர்கள் நின்று விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அணியின் சில விஷயங்களை சரிபடுத்த வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் யூஏஇயில் நிலவும் அதிகமான வெயிலையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Story first published: Sunday, October 4, 2020, 23:24 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+