Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகான பெண் குழந்தை... குடும்பத்தில் தேவதையை வரவேற்ற வீரர்... உற்சாக கொண்டாட்டம்

வெல்லிங்டன் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.

குழந்தை பிறப்பையொட்டி கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை.

அழகான பெண் குழந்தை

அழகான பெண் குழந்தை

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகான பெண் குழந்தையை தங்களது குடும்பத்தில் வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விடுப்பெடுத்த வில்லியம்சன்

விடுப்பெடுத்த வில்லியம்சன்

முன்னதாக தன்னுடைய முதல் குழந்தை பிறப்பையொட்டி அவர் கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மாறாக முதல் டெஸ்ட் போட்டியில் 251 ரன்களை குவித்து தன்னுடைய அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை அடையவும் காரணமாக இருந்தார்.

பங்கேற்காத வில்லியம்சன்

பங்கேற்காத வில்லியம்சன்

இரண்டாவது போட்டியில் கேன் வில்லியம்சன் இல்லாமல் நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டாலும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த அணி 2 போட்டிகளை கொண்ட இந்த தொடரை சிறப்பாக வெற்றிக் கொண்டுள்ளது.

3வது இடத்தில் வில்லியம்சன்

3வது இடத்தில் வில்லியம்சன்

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காததால் நேற்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் சிறிது கீழிறங்கி 3வது இடத்தில் உள்ளார் கேன் வில்லியம்சன். முதல் இரண்டு இடங்களில் ஸ்மித் மற்றும் கோலி இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Wednesday, December 16, 2020, 15:40 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+