Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பிக்ஸிங்: முட்கல் கமிட்டி என்னை விசாரிக்கவில்லை: ஓவைஸ் ஷா மறுப்பு

லண்டன்: ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பாக தம்மை முட்கல் கமிட்டி விசாரிக்கவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷா மறுத்துள்ளது.

ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முட்கல் கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

ஐசிசி தலைவராக இருந்த என்.சீனிவாசன், அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் ஆகியோருடன் மேலும் 3 பேருடைய பெயர்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.

Owais Shah denies knowledge of IPL match-fixing investigation

ஆனால் அவர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள் என தெரிய வந்ததையடுத்து அவர்களின் பெயரை வெளியிடுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

அந்த 3 வீரர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷாவும் ஒருவர் எனக் கூறப்பட்டது. ஆனால் இதை ஓவைஸ் ஷா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் என்னிடம் இருந்து எந்த விவரங்களையும் கேட்கவில்லை. எனது பெயர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது என்பது ஏமாற்றமளிக்கிறது. முட்கல் கமிட்டி என்னை விசாரிக்கவும் இல்லை என்றார்.

Story first published: Sunday, November 16, 2014, 12:22 [IST]
Other articles published on Nov 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+