Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு முன்னர் வீரர்கள் ‘உடலுறவு’.. உலகக்கோப்பை வெற்றியின் பின்னணி.. உண்மையை உடைத்த பயிற்சியாளர்

மும்பை: 2011 உலகக்கோப்பையை வெல்வதற்கு முன்னர் இந்திய வீரர்களுக்கு உடலுறவு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் 28 ஆண்டுகளாக கனவான உலகக்கோப்பையை கடந்த 2011ம் ஆண்டு தோனி பெற்றுக்கொடுத்தார்.

இந்த தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதிப்போடியில் தோனியின் சிக்ஸர் மூலம் உலகக்கோப்பை கைப்பற்றியதை இன்றுவரை யாராலும் மறக்கமுடியாது.

தி ஃபேர்ஃபுட் கோச்

தி ஃபேர்ஃபுட் கோச்

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து, அப்போது மனநல பயிற்சியாளராக இருந்த பேடி உப்டன் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 'தி பேர்ஃபுட் கோச்' என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்கள் கூறப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு உடலுறவு குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் உடலுறவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது அவர்களின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக ஆக்கக்கூடும் என்பதால் அறிவுறுத்தப்பட்டதாக பேடி உப்டன் குறிப்பிட்டுள்ளார். அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த கிர்ஸ்டன் இந்த ஆலோசனைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் புரிந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரூபனம்

நிரூபனம்

இதற்கேற்றார் போலவோ என்னவோ, 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரிய அளவில் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை. தொடர் முழுவதும், சிறப்பாக விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டும் தான் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் கோப்பை

சாம்பியன்ஸ் கோப்பை

இதுமட்டுமல்லாமல் 2009ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் பேடி உப்டன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் பயிற்சி ஆட்டங்களின் போது இந்திய வீரர்களுக்கு உடலுறவு குறித்த ஆலோசனைகள் வழங்கியதாகவும், அதனை போட்டிகளுக்கு முன்பு செய்வதால் செயல்பாடுகள் எப்படி முன்னேற்றம் அடையும் எனவும் டிப்ஸ் கொடுத்ததாக கூறியுள்ளார்.

Story first published: Friday, July 2, 2021, 16:45 [IST]
Other articles published on Jul 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+