Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரீத், டென்னிஸ் வீரர் அமிர்தராஜ்க்கு பத்ம விருது பெற்றனர்

2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுfளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த விழா டெல்லி ராஷ்டிரபதி பவனின் கணதந்திர மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் மொத்தம் 66 பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இரண்டு பத்ம விபூஷண், ஆறு பத்ம பூஷண் மற்றும் ஐம்பத்தெட்டு பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் ஒன்பது விளையாட்டு வீரர்கள், முன்னாள் தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்குவர். டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ், இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா போன்றோர் இதில் முக்கியமானவர்கள். அவர்களின் சிறப்பான பங்களிப்புகளுக்காக இந்தியாவின் உயரிய குடிமை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷண், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு வழங்கப்பட்டது. 2026 குடியரசு தினத்திற்கு முந்தைய நாள், விளையாட்டுத் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டது. விளையாட்டு வீரர், ஒளிபரப்பாளர் மற்றும் விளையாட்டு நிர்வாகி எனப் பல துறைகளில் அமிர்தராஜின் முன்னோடிப் பணிகடிள பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

ஆர்சிபி கிடையாது.. இந்த அணி தான் ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும்.. அக்சர் பட்டேல் கருத்து

ஆர்சிபி கிடையாது.. இந்த அணி தான் ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும்.. அக்சர் பட்டேல் கருத்து

என்.ஹெச்.44 நெடுஞ்சாலையில் உள்ள ஷாபாத் மார்கண்டா என்ற சிறிய நகரத்தை ஹாக்கி திறமையின் மையமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் பல்தேவ் சிங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1982இல் ஹரியானா விளையாட்டுத் துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்த பல்தேவ், 1993இல் மீண்டும் நகரத்திற்குத் திரும்பி, அப்பகுதியின் ஹாக்கி பயிற்சிப் பள்ளியை நாட்டின் மிகச் சிறந்த மையங்களில் ஒன்றாக மாற்றினார்.

'தௌ' ஜி எனப் போற்றப்படும் பகவந்தாஸ் ராய்க்வார், பந்தேலி தற்காப்புக் கலையின் புகழ்பெற்ற முன்னோடி மற்றும் பாதுகாவலர்களில் ஒருவர். சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பாரம்பரிய அகாடா சண்டைப் பாணியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டதற்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். 1964இல், தனது சொந்தக் குறைந்த வளங்களைக் கொண்டு, இந்தத் தற்காப்புக் கலை அழிந்துபோகாமல் இருக்க சத்ரசால் பந்தேல்கண்ட் அகாடாவை நிறுவினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விளையாட்டுத் துறைக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டார். இந்தியாவை முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்திய அவரது அசாதாரண தலைமைக்காகவும், சிறப்பான ஆட்டத்திற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

5,000 ஆண்டுகள் பழமையான சிலம்பம் தற்காப்புக் கலையின் நிபுணரான கே. பஜனிவேல், அதை நவீன போட்டி விளையாட்டாக உலகளவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார். கடலோர கிராமமான பூரணங்குப்பத்தைச் சேர்ந்த பஜனிவேல், சிறுவயதிலேயே ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலையை கற்று, தனது வாழ்நாளை அதற்கு அர்ப்பணித்தார். பலப் போட்டிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பாரா-தடகளத்தில் அவரது அற்புதமான வளர்ச்சி மற்றும் விளையாட்டுத் துறைக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. 2020 கோடைகால பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், 2024 கோடைகால பாராலிம்பிக்கில் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தைச் சொந்தமாக்கினார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த சிறந்த சேவைக்காக ரோஹித் ஷர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. எனினும் , அவருக்கு பின்னர் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர், டெஸ்ட் மற்றும் டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ரோஹித் ஷர்மா 67 டெஸ்ட், 282 ஒருநாள் மற்றும் 159 டி20ஐ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில், 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களை உள்ளடக்கி 4301 ரன்களைக் குவித்துள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் சவிதா புனியாவுக்கு 2026 குடியரசு தின விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. 'இந்தியாவின் பெருஞ்சுவர்' என்று அழைக்கப்படும் சவிதா புனியா, 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், FIH மகளிர் ஆண்டின் சிறந்த கோல்கீப்பர் விருதையும் பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை தலைக்கீழ் மாற்றும் எண்ணம் இல்லை.. ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை.. பொலார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியை தலைக்கீழ் மாற்றும் எண்ணம் இல்லை.. ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை.. பொலார்ட்

ஜூன் 23 அன்று திபிலிசியில் 81 வயதில், வயது தொடர்பான நோயால் காலமான விளாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலிக்கு (மரணத்திற்குப் பின்) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுப் பயிற்சியாளர் என்ற சிறப்பையும் விளாடிமிர் இதன் மூலம் பெற்றார்.

Story first published: Monday, May 25, 2026, 21:48 [IST]
Other articles published on May 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+