புக்கிகளின் மிரட்டலால் லண்டனுக்கு ஓடிப் போன பாக்.விக்கெட் கீப்பர் கிரிக்கெட்டுக்கு முழுக்கு

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆட வந்து 3 மாதங்களே ஆகிறது. வயதும் 24தான் ஆகிறது. ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள்ளேயே அவர் புக்கிகளின் மிரட்டலால் கிரிக்கெட்டை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
துபாயில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுடன் ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் 4வது மற்றும் 5வது போட்டிகள் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு உடன்பட்டுஆடும்படியும் ஹைதரை சூதாட்ட புக்கிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு உடன்படாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மிரட்டப்பட்டார்.
இதையடுத்து சொல்லாமல் கொள்ளாமல் துபாயிலிருந்து லண்டனுக்கு ஓடி வந்து விட்டார் ஹைதர். தற்போது இங்கிலாந்து அரசிடம் புகலிடம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட்டுக்கே முழுக்குப் போட்டு விட்டார் ஹைதர். இதுவரை ஒரு டெஸ்ட், நான்கு ஒரு நாள் போட்டிகள், 3 டுவென்டி 20 போட்டிகளில் மட்டுமே ஹைதர் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹைதர் கூறுகையில், எனது குடும்பத்திற்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். எனக்கு வரும் மிரட்டல்களை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
எனது முடிவை தெரிவிக்கும் கடிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பவுள்ளேன் என்றார் அவர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications