இந்திய ‘சி’ டீம் கூட இலங்கையை அடிக்கும்..அசிங்கப்படுத்திய பாக். முன்னாள் வீரர்..டிராவிட் தான் காரணம்
பாகிஸ்தான்: இந்தியா தற்போது இருக்கும் நிலைமைக்கு ஒரே நேரத்தில் 3 அணிகளை கூட அயல்நாட்டு சுற்றுப்பயணத்திற்கு அனுப்ப முடியும் என முன்னாள் வீரர் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணி அடுத்தடுத்த மாதங்களில் இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்தும், வருமானத்தை பெருக்கவும் ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை சுற்றுப்பயணம் அனுப்பும் முடிவை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்
வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி அங்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. அதன்பிறகு ஆக.4ம் தேதி முதல் செப். 14ம் தேதி வரை இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தமாக அடுத்த 3 மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட உள்ளது.

2வது இந்திய அணி
அதே நேரத்தில் வரும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆனால் இங்கு செல்லவுள்ளது இந்திய 'ஏ' பிரிவு அணியாகும். இதில் ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்கள் செல்லவுள்ளனர். இலங்கைக்கு எதிராக ஜூலை 13ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும், ஜூலை 22ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இளம் வீரர்களையும் அதற்காக தயார்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது.

அக்மல்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரம் அக்மல், இந்தியாவால் ஒரே நேரத்தில் 3 அணிகளை கூட உருவாக்க முடியும் என பாராட்டியுள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் கலாச்சாரம் மிகச்சிறப்பாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் அடிதளத்தில் இருந்து வீரர்களை மிகச்சிறப்பாக உருவாக்குகின்றனர். இந்திய அணி அடுத்ததாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவின் 3வது அணியை அதற்கு அனுப்பினாலும் இலங்கையை வீழ்த்திவிடும், அப்படிபட்ட பலமான வீரர்கள் இந்தியா வசம் உள்ளனர்.

டிராவிட் போட்ட விதை
முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பிசிசிஐ-காக கடந்த 7 - 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவர் இந்திய வீரர்களை அடிதளத்தில் இருந்து சிறப்பாக செதுக்கிய விதம் இன்று இந்திய அணியை வேறு இடத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அவர் தயார்படுத்தி அனுப்பும் இளம் வீரர்களை சர்வதேச போட்டிகளில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மேலும் மெறுகேற்றுகிறார்.

கேப்டன் பதவி
இந்திய அணியில் தோனிக்கு பிறகு விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒருவேளை கோலிக்கு ஓய்வு தேவைப்பட்டால் ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு உள்ளார். அவருக்கும் காயம் ஏதாவது ஏற்பட்டால் கே.எல்.ராகுல் உள்ளார். எனவே முக்கிய வீரர்கள் இல்லை என்ற கவலை பிசிசிஐ-க்கு இருக்கவே இருக்காது.


Click it and Unblock the Notifications