Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லை வைத்து சூதாட்டம்-பாக். முன்னாள் கேப்டன் அக்ரம் ரஸா கைது

லாகூர் : ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய நடுவருமான அக்ரம் ரஸா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 6 புக்கிகளும் கைதாகியுள்ளனர்.

11 வருடத்திற்கு முன்பு பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டவர் இந்த ரஸா. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தி்ல ஈடுபட்டு கைதாகியுள்ளார்.

குல்பர்க் நகர் என்ற இடத்தில் ஹோட்டலில் வைத்து இந்த ஏழு பேரையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குல்பர்க்கில் உள்ள லிபர்ட்டி பகுதியில் ஒரு ஹோட்டலி்ல வைத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அக்ரம் ரஸா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன். தற்போது அம்பயராக இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளை ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று கைது செய்தோம்.

அவர்களிடமிருந்து பணம், மொபைல் போன்கள், இந்தியாவைச் சேர்ந்த பல தொலைபேசி எண்கள் அடங்கிய டைரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம் என்றனர்.

46 வயதாகும் ரஸா, 9 டெஸ்ட் மற்றும் 49 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக்கின் நெருங்கிய நண்பர் இந்த ரஸா. இவரும் சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Thursday, June 7, 2012, 9:43 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+