Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் செய்த தவறுகளால் ஆப்கன் தோல்வி.. பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றது!

லீட்ஸ் : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நடந்த பரபரப்பான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் கடைசி நேரத்தில் செய்த சில தவறுகளால் அந்த அணி தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஆப்கன் பேட்டிங்

ஆப்கன் பேட்டிங்

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாராகவே ஆடினார்கள். அஸ்கார் ஆப்கன் 42, நஜிபுல்லா சத்ரான் 42, ரஹ்மத் ஷா 35 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

ஷஹீன் ஷா அசத்தல்

ஷஹீன் ஷா அசத்தல்

பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி மீண்டும் ஒருமுறை அபாரமாக பந்து வீசினார். இந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இமாத் வாசிம் 2, வஹாப் ரியாஸ் 2, ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தடுமாற்றம்

பாகிஸ்தான் தடுமாற்றம்

பாகிஸ்தான் அணி எளிய இலக்கை நோக்கி ஆடினாலும், ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சின் முன் தடுமாறியது. முதல் ஓவரிலேயே பாக்கர் சமான் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்கள் எடுத்தாலும், நிலைத்து நின்று ஆடவில்லை. இமாம் 36, பாபர் ஆசாம் 45, ஹபீஸ் 19, ஹாரிஸ் 27, சர்பராஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தவறு

ஆப்கானிஸ்தான் தவறு

பாகிஸ்தான் அணி முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தாலும், கடைசி நேரத்தில் அதை பயன்படுத்தத் தவறியது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் கேப்டன் குலாப்தின் தானே பந்து வீச ஆசைப்பட்டு 46வது ஓவரில் 18 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின் கடைசி ஓவரில் ரன் அவுட் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டார்.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

இமாத் வாசிம் கடைசி நேரத்தில் சிறப்பாகஆடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வஹாப் ரியாஸும் கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடி 9 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி தன் அரையிறுதிக் கனவை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Story first published: Saturday, June 29, 2019, 23:04 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+