Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்தரப்பு தொடரை வென்ற பாகிஸ்தான்.. ஆப்கான் 66 ரன்களில் ஆல்அவுட்.. நவாஸ் ஹாட்ரிக் சாதனை

ஷார்ஜா: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 66 ரன்களில் சுருட்டி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றதால், அந்த அணி வீரர்கள் நல்ல உத்வேகத்தை பெற்றுள்ளனர்.

சார்ஜாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் பல பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க வீரராக களமிறங்கிய பர்ஹான் டக் அவுட்டாகி வெளியேற சையிம் அயூப் 17 ரன்களிலும், பக்கர் ஷமான் 27 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

Pakistan vs Afghanistan

நிதானமாக விளையாடிய சல்மான் ஆகா 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஹசன் நவாஸ் 8 பந்துகளில் 15 ரன்களில் வெளியேற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன முகமது ஹாரிஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில் முஹம்மது நவாஸ் இரண்டு சிக்ஸர்களை விளாசி 21 பந்துகளில் 25 ரன்களும், ஃபகீம் அஷ்ரப் 8 பந்துகளின் 15 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ரசித் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. எனினும் ஆடுகளம் சுழற் பந்துவீச்சு சாதகமாக பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இதனால் தொடக்க வீரர் குர்பாஷ் 5 ரன்களில் ஆட்டம் இழக்க, செடிக்குல் அட்டல் 13 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் பவர் பிளேவில் கடைசி ஓவரில் பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 25 ரன்கள் எடுத்து சாதனையை படைத்தார். 5.5 வது ஓவரில் தர்வீஸ் ரசூலியும், கடைசி பந்தில் அஹ்மத்துல்லாஹ் உமர்சாயும் நவாஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்கள்.

இதை அடுத்து நவாஸ் தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் இப்ராஹிம் சாட்ரானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை நவாஸ் பெற்றார். இதை அடுத்து மற்ற வீரர்கள் கடுமையாக போராடி ரன்களை சேர்க்க முற்பட்டனர்.

ஆனால் ஆடுகளம் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. கேப்டன் ரஷீத் கான் இரண்டு சிக்ஸர்களை அடித்து போராடி 17 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 15 புள்ளி 5 ஓவர்கள் எல்லாம் 66 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்து வீசிய முகமது நவாஸ் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Monday, September 8, 2025, 6:32 [IST]
Other articles published on Sep 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+