Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா செய்த ட்ரிக்கை காப்பி அடித்தும் தோற்ற பாகிஸ்தான்.. செமயாக ஆப்பு வைத்த ஆப்கன்

ஹாங்சோ : ஆசிய விளையாட்டு டி20 அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி, முன்னதாக நடந்த அரை இறுதியில் இந்திய அணி செய்த அதே திட்டத்தை செயல்படுத்தியது. ஆனாலும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் முதலில் மோதின. அதில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PAK vs AFG semi final match result : Afghanistan beat Pakistan in semi final in Asian games 2023

சீனாவில் நடைபெறும் இந்தப் போட்டி நடக்கும் ஆடுகளம் முழுவதும் ஸ்பின் பந்துவீச்சுக்கே சாதகமாக உள்ளது. அதனால், இந்திய அணி அதிரடியாக நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கியது. ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே அணியில் இடம் பெற்றார். மேலும், ஒரு பகுதி நேர ஸ்பின்னரும் அணியில் இருந்தார்.

இந்தியா ஸ்பின்னர்களை வைத்தே வங்கதேச அணியை ரன் குவிக்க விடாமல் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் எடுத்து 96 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது. அடுத்து இந்திய அணி 9.2 ஓவர்களில் எல்லாம் இந்தியா இலக்கை எட்டியது. இதே பாணியை கடைபிடித்தது பாகிஸ்தான் அணி.

காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியும் நான்கு ஸ்பின்னர்களை வைத்து ஆடியது. ஆனால், அந்த அணியின் பேட்டிங் சரியில்லை.

ஆப்கானிஸ்தான் அணி இயல்பாகவே ஸ்பின் பந்துவீச்சை தான் அதிகம் நம்பும். இந்தப் போட்டியில் தங்களின் மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை வைத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை 115 ரன்களில் எல்லாம் சுருட்டியது.

இந்த இடத்தில் தான் இந்திய அணியின் திட்டத்தை பின்பற்றிய பாகிஸ்தான் அணி சறுக்கியது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களின் போது 6 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் எடுத்து இருந்தது.

கடைசி 3 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், 18வது ஓவரில் வேகப் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது பாகிஸ்தான். இதுதான் நேரம் என உணர்ந்த ஆப்கன் அணியின் மூத்த வீரர் குலாப்தின் நயிப் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி மூன்று ஓவரிலும் ஸ்பின் பந்துவீச்சை பாகிஸ்தான் பயன்படுத்தி இருந்தால் கூட வெற்றி பெற சிறிய வாய்ப்பு இருந்தது, ஆனால், பேட்டிங்கில் சொதப்பியது போலவே, அங்கேயும் சொதப்பி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகள் மோத உள்ளன.

Story first published: Friday, October 6, 2023, 16:27 [IST]
Other articles published on Oct 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+