Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். ரசிகர்களை காப்பாற்றிய வார்னர்.. மைதானத்தில் ஒரே குஷி..எதிர்ப்பும், பாராட்டும் குவிகின்றன

ராவல்பிண்டி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர், மைதானத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதுகலக்கப்படுத்தினார்.

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்தனர்.

ஆமை வேகம்

ஆமை வேகம்

ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

வார்னர் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் முடியவே 5 வது நாள் காலை ஆகிவிட்டது. இதன் பிறகு எப்படி போட்டியில் வெற்றி, தோல்வி இருக்கும். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனால் ரசிகர்களை குஷிப்படுத்த வார்னர் மைதானத்தில் குத்தாட்டம் போட்டார். வார்னரின் இந்த ஆட்டத்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

புஷ்பா ஸ்டைல்

புஷ்பா ஸ்டைல்

அத்துடன் வார்னர் நிற்கவில்லை. பஞ்சாபி டான்ஸ், புஷ்பா ஸ்டைல் என தொடர்ந்து சேட்டை செய்து வந்தார். இதனை பார்த்து சில ரசிகர்கள் வார்னர் விராட் கோலியை காப்பி அடிப்பதாக தெரிவித்தனர். மேலும் சிலர் வார்னே போன்ற வீரர்கள் தான் டெஸ்ட் போட்டியை உயிரோட்டமாக வைத்துள்ளதாக பாராட்டினர்.

Recommended Video

அறை முழுவதும் ரத்தக் கறைகள்.. Shane Warne மரணத்தில் மர்மம்?
ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இதனிடையே, ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னே உயிரிழந்து 3 நாட்கள் தான் ஆகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். ஆனால், வார்னர் மட்டும் அதை பற்றி கவலையே இல்லாமல் மைதானத்தில் குத்தாட்டம் போடுவது நியாயமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, March 8, 2022, 17:43 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+