Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

28 ஆண்டு வரலாற்றை உடைத்து பாகிஸ்தான் மாபெரும் வெற்றி.. பம்மிய ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் தோல்வி

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணி கடைசியாக 1996 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஆஸ்திரேலியாவை இந்த மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1 - 1 என சம நிலையை எட்டி உள்ளது.

pak vs aus pakistan australia

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி மிகவும் போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 163 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கூட எட்ட முடியாமல் ஆல் அவுட் ஆனது அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌப் அபாரமாக பந்து வீசி 8 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்த ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

மற்றொரு முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி 8 ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நசீம் ஷா மற்றும் ஹாஸ்னைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதை அடுத்து 164 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் சயீம் அயூப் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெளுத்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். சயீம் அயூப் 71 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் ஆறு சிக்ஸ் அடித்து இருந்தார்.

அப்துல்லா ஷபிக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 69 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து இருந்தார். நான்கு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். வெற்றிக்கு அருகே பாகிஸ்தான் இருந்தபோது பேட்டிங் இறங்கிய பாபர் அசாம் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 15 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சிக்ஸ் அடித்து இலக்கை எட்ட உதவி இருந்தார்.

பாகிஸ்தான அணி 26.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான். மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெல்லும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 8, 2024, 15:09 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+