
வெற்றி இலக்கு
இதனால் 506 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 192 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு 314 ரன்களுக்கு தேவைப்பட்டது. இதனால் களத்தில் 102 ரன்களுடன் நின்ற பாபர் அசாம், ஒரு நாள் போட்டியில் விளையாடுவது போல் ரன்களை வேகமாக சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

ரன் குவிப்பு
பாபருக்கு உறுதுணையாக நின்ற ஷபிக் 96 ரன்களுடன் ஆட்டமிழக்க, ஃபாவத் ஆலம் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் ஆட்டத்திற்குள் மீண்டும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. எனினும் முகமது ரிஸ்வான் களத்தில் பாபருக்கு ஆதரவு தர பாகிஸ்தான் மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபட்டது.

பாபர் சாதனை
தொடர்ந்து அபாரமாக விளையாடிய பாபர் அசாம் 196 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. பாபர் அசாம் பெவிலியன் நோக்கி சென்ற போது ஆஸ்திரேலிய வீரர்கள் கைத் தட்டி பாராட்டினர். இதன் மூலம் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்தார்.

ஆட்டம் டிரா
இந்த பட்டியலில் விராட் கோலி, பிராட்மேன் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தி தற்போது பாபர் முதலிடத்தில் உள்ளார். மறுபுறம் ரிஸ்வான் சதம் விளாச, ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் போட்டி டிராவானது. இரு அணிகளுமே வெற்றிக்கு பாடுபட்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.


Click it and Unblock the Notifications











