உங்கள இனி நம்ப முடியாது..! நானே பார்த்துக்கிறேன்.. களத்தில் சுத்தியலுடன் இறங்கிய ஆஸி. கேப்டன்
கராச்சி: பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களில் சுருண்டது.
இதனையைடுத்து 408 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 66 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வெற்றி இலக்கு
இதனால் 506 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 192 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடுகிறது. இன்னும் கடைசி நாளில் கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில், பாகிஸ்தான் வெற்றிக்கு 314 ரன்களுக்கு தேவைப்படுகிறது.

ஆடுகளம்
இந்த நிலையில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் மோசமாக உள்ளதால் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதல் டெஸ்டை விட இம்முறை ஆடுகளம் பரவாயில்லை என்றாலும், இந்தப் போட்டியிலும் விக்கெட்டை வீழ்த்த வீரர்கள் சிரமப்படுகின்றனர்.

திருப்தி இல்லை
இதனிடையே, இன்றைய ஆட்டத்தின் போது பந்துவீச்சாளர்கள் கால் பதிக்கும் இடத்தில் ஆடுகளம் சரிவரவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் செய்தனர். இதனையடுத்து, நடுவர்கள் மைதான ஊழியரை அழைத்து ,அதனை சரி செய்யும் படி கூறினார். ஆனால் பாகிஸ்தான் ஊழியர் செய்த பணி திருப்திகாரமாக இல்லை.
பாட் கம்மின்ஸ்
இதனையடுத்து, அந்த பணியை நானே செய்கிறேன் என்று கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், சுத்தியலை வாங்கி களத்தை அடித்து அதனை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாளை ஆஸ்திரேலியா 8 விக்கெட் வீழ்த்துமா இல்லை பாகிஸ்தான் மேலும் 314 ரன்கள் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மத்தியில் எழுந்துள்ளது


Click it and Unblock the Notifications