பாகிஸ்தான் போட்ட திட்டம் எல்லாம் வெஸ்ட்.. நாக் அவுட் செய்த ஆஸி. வேகம்.. இந்தியாவுக்கு ஆபத்து?
கராச்சி: பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டியும் டிராவானது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா, வார்னர் ஜோடி களமிறங்கியது.
வார்னர் 7 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்செங்கும் டக் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் தடுமாறியது.

ஆஸி 391 ரன்கள்
இதனையடுத்து தொடக்க வீரர் உஸ்மான் கலாஜா அபாரமாக விளையாடி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஸ்மித் 59 ரன்களில் வெளியேறினார். கேமரான் கிரின், அலெக்ஸ் கெரி ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி , நசீம் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுருண்ட பாகிஸ்தான்
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பாகிஸ்தான் தொடக்க வீரர் ஷபிக் 81 ரன்களும், அசார் அலி 78 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் அசுர வேகப்பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு சுருண்டது.

கவாஜா சதம்
123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. உஸ்மான் கவாஜா அபாரமாக விளையாடி சதம் விளச, டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 227 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பாகிஸ்தான் தோல்வி
கடைசி நாளான இன்று பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் என்ற ஸ்கோருடன் களமிறங்கியது. சபிக் 27 ரன்களில் ஆட்டமிழக்க,இமாம் உல் ஹக் 70 ரன்கள் எடுத்தார்.பாகிஸ்தான் அணி டிரா செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபர் அசாம் 55 ரன்களும், ரிஸ்வான் டக் அவுட்டாகியும் வெளியேற, மற்ற வீரர்களும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு ஆபத்து
இதனையடுத்து பாகிஸ்தான் அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சு எடுப்பட கூடாது என்ற நோக்கில் பாகிஸ்தான் ஆடுகளம் தயாரிக்க, அவர்களுடைய பிளானை சுக்குநூறாக ஆஸ்திரேலிய அணி உடைத்தது. ஆசிய ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணி உத்வேகத்துடன் களமிறங்கும். இதனால் இந்தியாவுக்கும் ஆபத்து காத்துள்ளது.


Click it and Unblock the Notifications