Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs PAK - மழையால் 7 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி.. பாகிஸ்தானை பொளந்த ஆர்சிபி வீரர்

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இதில் ஒரு நாள் தொடரை பாகிஸ்தான அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் டி20 தொடர் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியது.

இந்த போட்டி மழை மற்றும் இடி மின்னல் காரணமாக தடைப்பட்டது. இதனை அடுத்து ஆட்டம் தலா 7 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

pak vs aus glenn maxwell babar azam mohammed rizwan

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்கவீரர் மேத்தீவ் ஷார்ட் ஏழு ரன்களிலும், ஜேக் பிரேசர் 9 ரன்களிலும், டிம் டேவிட் 10 ரன்களிலுன் ஆட்டம் இழந்தார். எனினும் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஆர் சி பி அணியின் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடினார்.

பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்த அவர் ஐந்து பவுண்டரி மூன்று சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 19 பந்துகளில் மேக்ஸ்வெல் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் மார்கஸ் ஸ்டோனில் 7 பந்துகளில் 21 ரன்கள் விளாச அந்த அணி ஏழு ஒவ்வொரு முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் அப்பாஸ் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஃபர்கான் இரண்டு பௌண்டரிகள் எடுக்க பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆரம்பித்தது.

ஆனால் ஆஸ்திரேலிய வீசிய ஷார்ட் பாலை எதிர் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அதனை பெரிய ஷாட் அடிக்க முற்பட்டு அடுத்தடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார்கள். பர்ஹான் எட்டு ரன்களிலும், ரிஸ்வான் டக் அவுட் ஆகியும் பாபர் அசாம் மூன்று ரன்களிலும், உஸ்மான் கான் நான்கு ரன்களிலும், சல்மான் ஆகா நான்கு ரன்களிலும், இர்பான் கான் டக் அவுட் ஆகியும் வெளியேற பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் அபாஸ் அப்ரிடி, இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என பத்து பந்துகளில் 20 ரன்களும் ஷாகின் ஆப்ரிடி 6 பந்துகளில் 11 ரன்களும், ஹஸிபுல்லாகான் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 7 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி வரும் சனிக்கிழமை 16ஆம் தேதி சிட்னி நகரில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Thursday, November 14, 2024, 17:44 [IST]
Other articles published on Nov 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+