பெர்த் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடந்த இரண்டு மாதங்கள் முன் போதாத காலமாக இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அதன் பிறகு நாடு முழுவதும் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நடந்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் சாகின் அப்ரிடிக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறி அவர்கள் இருவரையும் அணியை விட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

அணியில் ஒற்றுமை இல்லை என்றால் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த சூழலில் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் ஒருநாள் டி 20 அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் பதவி ஏற்றார்.
இந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ரிஸ்வான் கைப்பற்றி 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டனர்.
இன்று பெர்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதாவது பாகிஸ்தான் அணியில் பாபர் அஸ்ஸாமுக்கும் ஷாகின் அப்ரிடிக்கும் மோதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 26 ஆவது ஓவரில் பாபர் அசாம் பீல்டிங்கிலிருந்து பந்தை வீசியபோது ஷாஹின் அதை பிடிக்க முயன்றார்.
அப்போது அவருடைய கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதன் அடுத்து ஷாகின் அப்ரிடி வலியால் துடித்தார். உடனே பாபர் அசாம், சாஹின் அப்ரீடியிடம் ஓடிவந்து விரலை பிடித்து அழுத்தினார். அதன் பிறகு ஒரு மருத்துவர் போல் ஷாகின் ஆபிரிடிக்கு பாபர் அசாம் சிகிச்சை அளித்தார்.
இதை பார்த்தவுடன் என்ன பாபர் அசாம் ஒரு மருத்துவர் போல் நடந்து கொள்கிறார் என்று அவரை பாராட்டினர். இதனை அடுத்து மருத்துவர்கள் ஷாகின் அப்ரிடிக்கு சிகிச்சை அளித்ததை அடுத்து அவர் மீண்டும் தனது பந்துவீச்சை தொடங்கி மேலும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான் வீரர்கள் இடையே மீண்டும் நட்பு உறவு ஏற்பட்டிருப்பதை இந்த சம்பவம் காட்டுவதாகவும், அதனால் தான் பாகிஸ்தான் மீண்டும் வெற்றியை பெற்றிருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.